பொன்னியின் செல்வன்ல் நடிக்கலனா என்ன – சோழ அரசி கெட்டப் போட்ட நயன்தாரா, வைரல் புகைப்படங்கள்

0
582
nayanthara
- Advertisement -

மகாராணி கெட்டப்பில் நயன்தாரா உடைய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று இருந்தார்கள்.

நயன்தாரா லேட்டஸ்ட் புகைப்படம்:

சமீபத்தில் நயன்தாரா அவர்கள் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து மீண்டும் ஜாலியாக ஸ்பெயின் நாட்டில் விடுமுறையை கொண்டாடியிருக்கிறார். சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில் மகாராணி கெட்டப்பில் நயன்தாரா உடைய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, தனியார் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நயன்தாரா நடித்திருந்தார். அதில் அவர், சோழ நாட்டின் மகாராணி போல் கெட்டப் போட்டு நடித்திருந்தார்.

-விளம்பரம்-

வைரலாகும் புகைப்படம்:

சோழ நாட்டுடைய பாரம்பரியத்தை போற்றும் வகையில் நயன்தாரா உடை மற்றும் நகை அணிந்து நடித்திருந்தார். தற்போது அந்த நகைக்கடை விளம்பரத்தினுடைய புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காமலேயே நயன்தாரா ராணி கெட்டப்பில் செம மாசாக இருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இன்னும் ஓரிரு வாரத்தில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். சமீபத்தில் தான் படத்தின் ட்ரைலர் வெளியாகி’இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் நயன்தாராவின் சோழ அரசின் கெட்டப் விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement