நயன்தாராவ ஓட்டிட்டு இருக்கவன் செருப்ப கழட்டிட்டு வண்டான் – மற்றொரு அதிமுக நபரின் சர்ச்சை பேச்சு. வீடியோ இதோ.

0
1098
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களோடு நடிப்பது மட்டுமல்லாமல் இவர் லீடு ரோலில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அப்படி இவர் நடித்து வரும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துவிடுகிறது திரைப்பட வாழ்க்கையை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகை நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார் பிரபுதேவாவுடன் காதல் சிம்புவுடன் காதல் என்று பல சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாரா இடையில் உதயநிதி ஸ்டாலினுடன் காதலில் இருப்பதாகவும் ஒரு கிசுகிசு எழுந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் உதயநிதியால் பல்வேறு தேர்தல் பிரச்சாரத்தில் நயன்தாராவின் பெயர் நாறி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராதாரவியின் இந்த பேச்சை கண்டித்து, ராதாரவி மீது திமுக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இதையும் பாருங்க : கிளாமர் உடை புகைப்படத்தை பகிர்ந்த பிரியாமணியிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட வக்கிர நபர் – செருப்படி பதில் கொடுத்த பிரியாமணி

- Advertisement -

இதையடுத்து நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியது திமுக. தற்போது பா ஜ கவில் இருக்கும் ராதாரவி, வருகிற சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பா ஜ க சார்பாக போட்டியிடும் குஷிபூவை ஆதரித்து பேசி இருந்தார். அப்போது, தான் திமுகவில் இருந்த போது நயன்தாராவை பற்றி பேசியதால் என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். நயன்தாரா யாரு டா உன் கட்சி கொள்கை பரப்பு செயலாளரா ? என்ன உறவு உனக்கு. சரி, உதயநிதிக்கு நயன்தாராவுக்கு உறவுன்னா அதுக்கு நான் என்ன செய்றது என்று பேசியுள்ளார் ராதாரவி.

வீடியோவில் 5 20 நிமிடத்திற்கு பின் பார்க்கவும் பார்க்கவும்

தற்போது இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியால் நயன்தாராவின் பெயர் டேமேஜ் ஆவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வாக்குசாவடி நிலைய முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான K.T ராஜேந்திர பாலாஜி பேசிய போது, உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய பிரச்சினை வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்கப் போகிறாள் என்று எனக்கு தகவல் வந்தது.

-விளம்பரம்-

அது என்ன புகார் என்று கேட்டால், அதை புகாரில் குறிப்பிடுவேன் என்று சொல்லிவிட்டாராம்., எனவே,  உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார் என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக பிரச்சாரத்தில் அதிமுகவை சேர்ந்த நபர் ஒருவர் நயன்தாரா பற்றிய பேசிய வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement