திருமணத்திற்க்கு பின் புதிய டாட்டூவை போட்ட நயன்தாரா – அதுவும் என்ன போட்டு இருக்காங்க பாருங்க.

0
316
vignesh
- Advertisement -

நயன்தாரா புதியாக டாட்டூ குத்தி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா திருமணம் நடந்து முடிந்தது. ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

திருமணத்திற்கு பின் விக்கி-நயன்:

இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக கோயிலுக்கு சென்று இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

நயன்-விக்கி விடுமுறை கொண்டாட்டம்:

தற்போது நயன்தாரா அவர்கள் மும்முரமாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் முடிவடைந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நயன்தாரா அவர்கள் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து ஜாலியாக வெளிநாடு பயணம் சொன்று இருக்கிறார்.

நயன்தாராவின் டாட்டூ புகைப்படம் :

அந்த வகையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் ஜாலியாக தன்னுடைய கணவருடன் நயன் விடுமுறையை கொண்டாடியிருக்கிறார். சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் நயன்தாராவின் டாட்டூ புகைப்படம் வைரலாகி வருகிறது. பொதுவாகவே, நயன்தாரா டாட்டூ குத்திக் கொள்வதை அதிகம் விரும்புபவர். தற்போது அவர் தன்னுடைய பின் கழுத்தில் ஒரு புதிய டாட்டூ குத்தி இருக்கிறார். ஆனால், அதற்கான அர்த்தம் என்னவென்று தெரியவில்லை.

Advertisement