இன்று ரக்சா பந்தன் கொண்டாட்டம் – நயன்தாரா யாருக்கு ராக்கி கயிறு காட்டியுள்ளார் பாருங்க ? வைரலாகும் வீடியோ.

0
419
nayanthara
- Advertisement -

இன்று ரக்சா பந்தன் தினம் என்பதால் இந்தியா முழுவதும் சகோதர, சகோதரிகள் தங்கள் அன்புக்குரியவர்கள் கையில் ராக்கி கட்டி விட்டு தங்களுக்குள் இருக்கும் அன்பே வெளிக்காட்டுவார்கள். இந்த நிகழ்வு வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு நாள். இதனால் பாலிவுட் உள்ள நடிகை, நடிகைகள் மற்றும் திரை பிரபலங்கள் தன் அன்புக்கு பாத்திரமானவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ரக்சா பந்தனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாள் சமீப வருடங்களாக தமிழ்நாட்டிலும் ராக்கி கட்டி கொண்டாடி வருவது வழக்கமான ஒரு தமிழ் கலாச்சாரம் போல் மாறி வருகிறது. இதுபோல மற்றொரு வட இந்திய நிகழ்ச்சி ஆன கோல பண்டிகையும் இப்போது தமிழ் கலாச்சாரத்தில் என்ட்ரி கொடுத்து வருகின்றது.

-விளம்பரம்-
nayanthara

தமிழ்நாட்டில் ரக்சா பந்தன் கொண்டாடப்படும் விதம் சற்று வித்தியாசமாக இருக்கும். ரக்சா பந்தன் நாளில் ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் பெண்களைப் பார்த்து பின்னங்கால் தலையில் அடிக்க தெரிவித்து ஓடும் நாள். எங்கே தன் மனம் கவர்ந்த பெண் தனக்கு ரக்சா பந்தன் நாளில் ராக்கி கட்டி அண்ணாவாக்கி விடுவாளோ என்ற பயம்தான். தமிழ்நாட்டு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் இது ஒரு விசேஷமான நாள் என்றும் சொல்லலாம். ஏனென்றால் ” ரக்சா பந்தன் தினம் என்பதால் இளைஞர்கள் யாரும் பெண்களின் இன்பாக்ஸ் பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறோம் ” மற்றும் ” ஹாப்பி ரக்ஷா பந்தன் என்று சொல்லிக்கொண்டு பெண்கள் யாரும் எனது இன்பாக்ஸ் பக்கம் வர வேண்டாம் ” என்பது போல மீம்ஸ் கிரியேட் செய்து வழக்கம்போல் காலையில் இருந்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் தெறிக்க விடுகின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

- Advertisement -

மருத்துமனையில் சிகிச்சை எடுத்து கொண்ட நயன் :-

திடீரென்று வாந்தி எடுத்த நயன்தாரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார்.

நயன்தாரா நடித்து வரும் படங்கள் :-

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் பெற்று கனெக்ட், ஜவான், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், காட்ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா திருமணம் நடந்து முடிந்தது. ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

-விளம்பரம்-

ரக்சா பந்தன் கொண்டாடிய நயன்தாரா :-

இன்று ரக்சா பந்தன் தினத்தை பாலிவுட்டில் உள்ள நடிகை, நடிகர்கள் கொண்டாடுவது போன்று தமிழகத்தின் முன்னனி நடிகையாக வலம் வரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது அன்புக்கு பாத்திரமான மற்றும் தனக்கு நெருக்கமாக இருக்கும் பெண்ணுக்கு ராக்கி கட்டி விடுவது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் டிரன்டிங்காகி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் அந்த பெண் நயன்தாராவுக்கு ராக்கி கட்டி விடுவது. பின் அந்தப் பெண்ணுக்கு நயன்தாரா ராக்கி கட்டி விட்டுவது போலவும் இருக்கும். நயன்தாரவும் அந்த பெண்னும் மாறி மாறி ராக்கி கட்டி விட்டு தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் நெகிழ்ச்சியான சம்பவம் அந்த வீடியோவில் இருந்தது.இந்த வீடியோவை நயன்தாராவின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement