இன்னும் நயனை மறக்கவில்லையா STR – மாநாடு படத்தில் வந்த நயன்தாராவின் இந்த Reference-ஐ எல்லாம் நோட் பண்ணீங்களா ?

0
458
simbu
- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வரும் சிம்பு சமீப காலமாகவே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக இவரது படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநாடு படமும் பல தடைகளை கடந்து வெளியாகினாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து உள்ளது. இந்த படம் ஆரம்பித்த நாள் முதலே எண் 9 குறிப்பிட்டே பல அப்டேட்டுகள் வந்தது என்பதை நெட்டிசன்கள் பல முறை ஆதாரப்பூர்வமாக கூறி வந்தனர்.

-விளம்பரம்-

மாநாடு படத்தின் பிரஸ் மீட் கூட நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18 ஆம் தேதி தான் நடைபெற்றது. இந்த விழாவில் வந்த சிம்பு, 9 ஆம் நம்பர் சேரில் தான் அமர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது இதை வைத்து ரசிகர்கள் பலரும் காலாய்த்து வந்தனர். இந்த நிலையில் படம் வெளியான பின்னர் படத்தில் பல இடங்களில் நயன்தாராவின் ரெபரென்ஸ் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

மாநாடு படத்தில் வரும் பிளாஸ் பேக் காட்சியில் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் கார்ட்டூன் ஓவியம் ஒன்று இடம்பெறுகிறது. அந்த கார்டூனில் வரும் கல்யாணி, பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது நயன்தாராவிற்கு இருப்பது போலே அந்த புகைப்படத்தில் மச்சமும் இருக்கிறது.

இதனை பார்த்து, கண்டிப்பாக இது நயன் தான் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது படத்தில் வரும் அறை எண் ஒன்றில் 414 அதாவது 4+1+4 = 9 என்பது கூட நயன்தாராவை குறிக்கிறது என்றும் படத்தில் மூக்குத்தி அம்மன் துணை என்று நயன் நடித்த பட டைட்டில் கூட ஒரு காட்சியில் வருகிறது.

-விளம்பரம்-

ஏற்கனவே படத்தின் டீஸர் ரிலீஸ், ட்ரைலர் ரிலீஸ் போன்ற அனைத்திலும் 9 என்ற நம்பர் வரும்படியே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் வைத்து நடிகர் சிம்பு நயன்தாராவை இன்னமும் மறக்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதை பற்றி உங்களின் கருத்து என்ன என்பது சொல்லுங்கள்.

Advertisement