பையா படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்த காரணம் இது தான். லிங்குசாமி சொன்ன தகவல். வைரலாகும் வீடியோ.

0
46207
paiyya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் லிங்குசாமியும் ஒருவர். இவர் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு 2001ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானர். இவர் சொந்தமாக திருப்பதி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ரன்,சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, கும்கி, இவன் வேற மாதிரி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். பையா படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதையாகும். இந்த படம் 2010 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளி வந்த படம் ஆகும்.

-விளம்பரம்-
Image result for paiya

- Advertisement -

பையா படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி என்று சொல்லலாம். லிங்குசாமியின் சகோதரர் தான் போஸ். இவர்கள் இருவரும் இணைந்து தான் இந்த படத்தை தயாரித்தார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருந்தார். படத்தின் ஒவ்வொரு பாடல்களும் வேற லெவல்ல ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். மேலும், வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர் கார்த்திக். இவர் தன் நண்பர்களுடன் பெங்களூரில் தங்கி இருக்கிறார். அப்போது தான் தமன்னாவை சந்திக்கிறார். பின் தமன்னாவை மும்பையில் கொண்டு சென்று விடுவதற்காக அவருடன் காரில் செல்கிறார். இவர்கள் பயணிக்கும் வழியில் எல்லாம் இவர்களுடைய எதிரி கும்பல்கள் இவர்களை தாக்குகிறார்கள். இதை மீறி கார்த்திக் தமன்னாவை காப்பாற்றுகிறார்.

இதையும் பாருங்க : அஜித்தின் அமைதிக்கு பின்னால் இருக்கும் சோகமான வலி – கோபிநாத் சொன்ன ரகசியம். வைரலாகும் வீடியோ.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பையா படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, முதலில் நாங்கள் படத்தை எடுப்பதற்கு கரெக்டான லோகேஷன் தேடினோம். அப்ப பெங்களூர் டு மும்பை லொகேஷனை தேர்வு செய்தோம். இது முழுக்க முழுக்க டிராவலிங் படமாக எடுத்தோம். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கார்த்திக் அவர்களை தேர்ந்தெடுத்தோம். நடிகர் கார்த்திக் அவர்கள் ஒரு சின்சியரான மனிதர். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேசப்பட்டது. ஆனால், இந்த படம் எடுக்கும் போது நயன்தாராவுக்கு சில படங்களில் சேலரி கம்மியாக கொடுத்து வந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

வீடியோவில் 2 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

அதனால் நாங்கள் இந்த படத்தில் நடிக்க நயன்தாராவிடம் சேலரி கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டோம். அதற்கு பிறகு தயாரிப்பாளருக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஒரு சின்ன பிரச்சனையால் அவர் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டார். அதற்கு பிறகு தான் தமன்னா அவர்களை இந்தப் படத்தில் நடிக்க முடிவு எடுத்தோம். இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இந்த படத்தின் பாடல்கள், நடிகர், நடிகைகள் எல்லாருமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்கள். அது மட்டுமில்லாமல் அந்த வருடம் நடைபெற்ற எல்லா விருதுகளையும் இந்த படத்தின் பாடல்களுக்கும், நடிகர்களுக்கும் தான் விருது கிடைத்தது என்று சொல்லலாம் என்று கூறினார்.

Advertisement