அஜித்தின் அமைதிக்கு பின்னால் இருக்கும் சோகமான வலி – கோபிநாத் சொன்ன ரகசியம். வைரலாகும் வீடியோ.

0
23289
ajith-gopinath
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் “நீயா நானா” விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கோபிநாத். இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். கோபிநாத் அவர்கள் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

-விளம்பரம்-

வீடியோவில் 3:40 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

மேலும், கோபிநாத் அவர்கள் இந்த நீயா நானா என்ற நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமானார். இதற்கு பிறகு கோபிநாத் அவர்கள் சினிமாவிலும் களம் இறங்கினார். இவர் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தோனி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தல அஜித்திடம் இன்டர்வியூ எடுக்கும் போது நடந்த நிகழ்வை பற்றி தொகுப்பாளர் ஒருவர் கோபிநாத் இடம் கேட்டார். அதற்கு அவர் கூறியது, நான் தல அஜித்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் நிதானமாக வார்த்தைகளை யோசித்து யோசித்து பேசினார். நான் உடனே கேமராவை நிறுத்த சொல்லி விட்டேன். அப்புறம் அஜித் அவர்களிடம் பேசினேன்.

இதையும் பாருங்க : ஹரிஷ் கல்யானை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் பிரபலத்தை சந்திக்க விரும்பிய ரைசா. வீடியோ இதோ.

நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம். உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லுங்க அப்படின்னு நான் சொன்னேன். அதற்கு அஜித் அவர்கள் கூறியது, நான் முதல்ல அவ்வளவாக இன்டெர்வியூ கொடுக்க மாட்டேன். ஏன்னா, எனக்கு முதல்ல சரியாக தமிழ்ல பேச வராது. அதனால் பல பேர் இவர் தமிழ் நடிக்கிறாராக இருந்து தமிழ் பேச வராதா? என்று விமர்சனங்கள் எழுப்பினார்கள். அதுக்கப்புறம் நான் கொஞ்சம் இங்கிலிஷ்ல பேச தொடங்கினேன். அதுக்கு தமிழ் நடிகர் ஆக இருந்து கொண்டு இங்கிலீஷ்ல பேசுவீங்களா என்று கிண்டல் பண்ணி விமர்சனம் செய்தார்கள்.

-விளம்பரம்-

அதுக்கப்புறம் சரி எது பேசினாலும் விமர்சனம் எழுப்புகிறார்களே என்று கொஞ்சம் அமைதியாக பேசாமல் இருந்தேன். அதற்கும் இவர் என்ன பெரிய நடிகராக இருந்தால் ரொம்ப அமைதியாக எதுவும் பேசாமல் இருப்பாரா? என்றும் ஒரு விமர்சனம் எழுப்ப ஆரம்பிச்சாங்க. உண்மையிலேயே நான் எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் நானே கற்று கொண்டு வந்தேன். சின்ன சின்ன விஷயங்கள் கூட நானே தெரிஞ்சுகிட்டு, இது சரியா இருக்கும் என்று புரிஞ்சுகிட்டு தான் இந்த அளவுக்கு வந்து இருக்கேன். இந்த வார்த்தைக்கு இது தான் அர்த்தம் என்பது கூட நான் தெரிந்து கொண்டு தான் பேசினேன். அதனால தான் நான் அமைதியா இருக்கறதுக்கு காரணம் என்று கூறினார்.

இது ஒரு புறம் இருக்க தற்போது நடிகர் கோபிநாத் ஹீரோவாக படத்தில் நடிக்க உள்ளார். “இது எல்லாத்துக்கும் மேல” என்ற பெயர் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பாரதி கணேஷ் என்பவர் இயக்க உள்ளார். அதோடு இவர் விஜயகாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான கண்ணுபடபோகுதய்யா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் சதிஷ் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குழந்தைகளை மையமாக கொண்ட கதை ஆகும். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அக்ஷிதா, ராகுல், ஷோபன், ஆதித்யா மற்றும் மவுரியா ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.

Advertisement