விஸ்வாசத்திற்கு சம்பளம் பற்றி பேசாத நயன்..!விஜய் 63 க்கு இத்தனை கோடி வேண்டும் என்று கரார்..!

0
1339
nayanthara

தமிழ் சினிமாவின் லைடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல கோடிகளில் சம்பளம் வாங்குகின்றார் என்பது ஊரறிந்த ஒன்று தான். அதே போல அம்மணி நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட் ஆகிவிடுகிறது.

vijay63

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை நயன்தாரா இதுவரை ரூ.4 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர், `கோலமாவு கோகிலா’ படத்துக்குப்பின் தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார் என்று சில செய்திகள் வெளியானது.

கோலமாவு கோகிலா’ படம் ரூ.12 கோடி வசூல் செய்து இருக்கிறது. அந்த படத்துடன் வந்த ஒரு பெரிய கதாநாயகனின் படம் ரூ.9 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது. எனவே என் சம்பளத்தை மேலும் ரூ.2 கோடி உயர்த்தியதில், எந்த தவறும் இல்லை என்று கூறுகிறாராம் நயன்.

-விளம்பரம்-

தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய்63 படத்திலும் நடிகை நயன் தான் கதாநாயகி, ஆனால், இந்த படத்திற்கு 5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் நயன். கொஞ்சம் குறைத்துகொள்ளுங்கள் என்று நயனிடம் பேச்சு வார்த்தை நடத்தினாலும் கட் அண்ட் ரைட்டாக 5 கோடி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் நயன். விஜய் படத்திற்கு இவ்வளவு கெடுபுடி காட்டும் நயன் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் கமிட் ஆனபோது மட்டும் சம்பளத்தை பற்றி எதுவும் பி[பேசாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement