மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா – இணையத்தில் கசிந்த புகைப்படம்

0
2108
nayan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அட்லீ. இவர் ராஜாராணி படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

-விளம்பரம்-

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்து பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் பரவி வந்தது. மேலும், அட்லீ – ஷாருக்கான் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி உள்ளது. அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று தெரியவந்து உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான சூட்டிங் தொடங்கியுள்ளது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இவர்களுடன் ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு, கலை இயக்குனர் முத்துராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து உள்ளது. இது அட்லீயின் புது படத்தின் சூட்டிங்கில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

Atlee's film with Shah Rukh Khan to begin in August | Tamil Movie News -  Times of India

அதில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரும் உள்ளனர். இதை ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். மேலும், இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக ஷாருக்கானும், நயன்தாராவும் இந்த படத்தின் மூலம் இணைந்து நடிக்க உள்ளார்கள். சமீபத்தில் தான் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

-விளம்பரம்-
Advertisement