இந்தி நடிகையுடன் இணைந்து நயன்தாரா நடத்திய போட்டோ ஷூட்.. வாயடைத்த ரசிகர்கள்..

0
70121
nayanthara-katrina-kaif
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். மேலும்,நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். மேலும்,ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள். இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர், தமிழ் மொழியில் மெஹா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், நடிகை நயன்தாரா அஜீத்துடன் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் உருவான சிரஞ்சீவியின் நடிப்பில் வெளிவந்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிகை நயன்தாரா சிறப்பான தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : நீண்ட இடைவேளைக்கு பின் சித்தப்புவை சந்தித்த போட்டியாளர்.. புகைப்படத்தை வெளியிட்ட ரித்விகா..

- Advertisement -

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நயன்தாரா அவர்கள் போட்டோ ஷூட் கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த ஆங்கில நாளிதழ் போட்டோ சூட்டிற்கு பாலிவுட் ஹீரோயின் கத்ரீனா கைஃப் மற்றும் தமிழ் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள் என்ற தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் கத்ரீனா கைஃப் மற்றும் நயன்தாரா இணைந்து எடுத்த போட்டோ ஷூட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த மாதிரி பாலிவுட், கோலிவுட் ஹீரோயின்கள் இணைந்து போட்டோ ஷுட் பண்ண வீடியோவை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் அந்த வீடியோவில் கத்ரினா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் உள்ளனர்.

Image
Image
Image

இந்த போட்டோ ஷூட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் நயன்தாராவை பாராட்டியும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நயன்தாரா நடிக்கும் பிகில் படமும் திரையரங்கிற்கு வெளிவர உள்ளது. அது மட்டும் இல்லாமல் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ படத்திலும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில்,மிலிந்த் ராவ் இயக்கும் ‘நெற்றிக்கண்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்கள். அதோடு எங்க தலைவி நயன்தாராவின் ஃபோட்டோ ஷூட் வீடியோ பாருங்க என்று ரசிகர்கள் இணையங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement