தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.
சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது.இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் ஷுவான் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம் என்று கூறி இருந்தார்.
அதே போல கடந்த சில நாட்களுக்கு முன் விக்னேஷ் சிவனிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், ‘ஏன் நீங்கள் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், “திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நயன்தாரா தனது தந்தை ஆசைக்கு இணங்க விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம். சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனி விமானத்தில் சென்றிருந்தார்.
மேலும், நயன்தாரா தனது தந்தையை சந்திக்க தான் விக்னேஷ் சிவனுடன் சென்று இருந்தாராம். நயன்தாராவின் தந்தையின் உடல்நிலை குன்றியதால் தான் அவரை சந்திக்க நயன்தாரா சென்றதாக கூறப்படுகிறது. மேலும், தனது மகளை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்படுகிறாராம். இப்படி ஒரு நிலையில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நடிகை நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.