நயன் படத்திற்காக ஓட்டு மொத்த படக்குழுவும் செய்த விஷயம் – இதெல்லாம் ஓவரா இல்ல.

0
1548
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நயன் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஆர். ஜே. பாலாஜி கதை, திரைக்கதையில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.

இதையும் பாருங்க : இறுதி சுற்று படத்தில் ரித்திகா அக்காவாக வந்த லக்ஸ்ஸா இது. பாத்தா நம்பமாடீங்க.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கூட வெளியானது மேலும், அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நயன் மட்டும் விரதமில்லை ஓட்டு மொத்த படக்குழுவும் விரதம் இருந்ததாம்.

nayan

அட ஆமாங்க, நயன்தாரா 48 நாட்கள் அசைவம் உண்ணாமல் விரதமிருந்து போல படக்குழு மொத்தமும் இந்த பட ஷூட்டிங்கிற்காக சைவம் மட்டும் எடுத்துக்கொண்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே மே 1ஆம் தேதி படம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement