‘ராஜா ராணி’ நடிகை நஸ்ரியாவை யாராவது அவ்வளவு சீக்கிரம் மறப்பார்களா!!! ஏனென்றால் தற்போது கூட அவருடைய குறும்புத் தனமும், சுட்டி தனமும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் உள்ளது. இவர் முதன்முதலாக தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். ஆனால், இவர் நிவின் பௌலியுடன் இணைந்து நடித்த ‘நேரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இதனை தொடர்ந்து ‘ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா, வாயை மூடி பேசவும்’ என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளார் நடிகை நஸ்ரியா. மேலும்,இவர் திரைப்பட நடிகையும் மட்டுமல்லாமல் பின்னணி பாடகி, நிகழ்ச்சி தொகுப்பாளர், விளம்பர அழகி என பன்முகங்களை கொண்டவர்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா அவர்கள் மலையாள மொழியின் முன்னணி இயக்குனரான பாசில் என்பவரின் மகனும் மலையாள மொழியின் நடிகருமான பஹத் பாசிலை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். பின் இவர் சினிமா உலகை விட்டு விலகி இருந்தார். மேலும், இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் அதை ஏற்காமல் இருந்தார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா அவர்கள் தினமும் மலையாள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிற்கு சென்று வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது.
இதையும் பாருங்க : படு குண்டாக இருந்த பூர்ணாவா இது. திடீல்னு என்ன இவ்ளோ ஒல்லி ஆகிட்டாங்க.
இதுகுறித்து பார்க்கையில் திருமணத்துக்கு பிறகும் நஸ்ரியாவின் சுட்டித்தனமும், குறும்பு தனமும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று கூறுகிறார்கள். மேலும், நஸ்ரியா அவர்கள் தினமும் துல்கர் சல்மான் வீட்டிற்கு காலையில் சென்று விட்டு மாலை தான் திரும்பி வருவாராம். மேலும், இது குறித்து துல்கர் சல்மான் கூறியது, ஸ்கூலுக்கு குழந்தைகள் துள்ளிக் கொண்டு எப்படி செல்லுமோ அதே மாதிரி தான் நஸ்ரியாவும் தினமும் என் வீட்டுக்கு வருவார்.
அதுமட்டுமில்லாமல் அவருடைய கணவர் பகத் பாசிலே காலையில் எங்கள் வீட்டில் விட்டு மாலையில் வந்து அழைத்துச் செல்வார். என்ன காரணம் என்று பார்க்கிறீங்களா, நஸ்ரியாவும் என் மனைவி அமல் சுபியாவும் நெருக்கமான உயிர் தோழிகள். மேலும், இவர்கள் இருவரும் சினிமாவுக்கு சென்றாலும், பொருட்களை வாங்க ஷாப்பிங் சென்றாலும், அதோடு எங்கு சென்றாலும் ஒன்றாகத் தான் போவார்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். மேலும், துல்கர் சல்மான் பற்றி நடிகை நஸ்ரியாவிடம் கேட்டபோது அவர் கூறியது, துல்கர் சல்மான் எனக்கு அண்ணன் போன்றவர்.
அவருடைய மனைவி நானும் நெருங்கிய தோழிகள். எங்கு போனாலும் நாங்கள் ஒன்றாக தான் போவோம். நான் எப்போதும் அவர்கள் வீட்டில் தான் இருப்பேன் என்று கூறினார். தற்போது நஸ்ரியா அவர்கள் அஞ்சலி மேனன் இயக்கும் ‘கூடே ‘என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரிதிவிராஜ், நடிகை பார்வதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஏற்கனவே நடிகை நஸ்ரியா அவர்கள் இதற்கு முன்னாடி அஞ்சலி மேனன் இயக்கத்தில் பெங்களூர் டேஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். மேலும்,மலையாளத்தில் இது தான் இவர் கடைசியாக நடித்த படமாக இருந்தது. மேலும், இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கேட்கிறார்கள்.