ஷாக்கிங் நியூஸ் ‘தல59’ படத்தில் நஸ்ரியா இல்லை.! அவருக்கு பதில் இவர் தானம்.!

0
231

அஜித் தற்போது அவரது 59 படத்தில் நடித்துவருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்தரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்தில் நஸ்ரியா நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை நஸ்ரியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி படுத்தி இருந்தார். ஆனால், தற்போது நடிகை நஸ்ரியா இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளார்.

இதையும் படியுங்க : அஜித் 59 படத்தில் நடிக்க பிடிக்கவில்லை.!பிரபல நடிகை ஷாக்.!காரணம் இது தானம்.! 

அவருக்கு பதிலாக ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சமீபத்தில்
தல 59 திரைப்படத்தின் கதாபாத்திரம், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, கடந்த சில நாட்களாக தல 59 படத்தில் நான் நடிக்கவுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவின. தற்போது அது உண்மையாகியுள்ளது. ஆம், அஜித் சாருடன் நடிக்கிறேன். மிகவும் சவாலான ரோலில் நடிக்கிறேன். ஹெச்.வினோத், போனி கபூர் புரொடக்‌ஷன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா – இந்த டீமுடன் பணியாற்ற மிகவும் ஆர்வமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.