அப்பவே மாசம் 100000 சம்பாதிச்சேன், அது எல்லாத்தையும் அந்த பழக்கத்தால் அப்பா அழிச்சிட்டார் – நீலிமாவின் மறுபக்கம்.

0
1011
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நீலிமா ராணி. இவர் உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பின் இவர் டும் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதோடு இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி என்ற தொடரில் நடித்து இருந்தார்.

- Advertisement -

நீலிமா குடும்பம் :

இதனிடையே நீலிமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார். கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். அதவும் இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமாக மேட்டர்னிட்டி போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.

நீலிமா நடத்திய போட்டோ ஷூட் :

அந்த புகைப்படத்தில் நீலிமா தாமரைமேல் ஒரு அழகான கர்ப்பிணி அம்மனாக இருக்கும் அவதாரத்தில் இருந்தார். இதை பார்த்து பலரும் நீலிமாவுக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர் . பின் இவருக்கு கிட்டத்தட்ட திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்தி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய தந்தை குறித்து நீலிமா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நீலிமா பேட்டி:

வீடியோவில், நான் நடித்துக் கொண்டிருப்பது மாதம் ஒரு லட்சம் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அந்த பணத்தை எல்லாமே என்னுடைய அப்பா சூதாட்டத்தில் விட்டுட்டார். இது எனக்கு கஷ்டமாக இருந்தது. எப்படி சமாளிக்க போறேன்னு இருந்தது. ஆனால், ஒன்று தான் நான் சொல்ல விரும்புகிறேன். தோல்விகள் தான் வெற்றியின் படிகள். ஏன்னா, அந்த இடத்தில் நான் தளர்ந்து சோர்ந்து போய் அய்யய்யோ அப்பா இப்படி பண்ணிட்டாங்களே என்று நினைத்திருந்தால் எப்படி வாழ போறோம், எப்படி என் தம்பியை படிக்க போறோம் என்று நினைத்திருந்தால் நான் இந்தளவிற்கு வந்திருக்க முடியாது.

அப்பா குறித்து சொன்னது:

நான் அந்த இடத்தில் தைரியத்தை விடவில்லை. இந்த தைரியத்தை என்னுடைய அப்பா தான் எனக்கு சொல்லித் தந்தார். தன்னம்பிக்கை தைரியத்தோடு வாழ வேண்டும் என்று எனக்கு கற்றும் கொடுத்தார். பின் ஒரு வாடகை வீட்டுக்கு போய் ஒரு அந்த வாடகை வீட்டை வாங்கும் அளவிற்கு எனக்கு நம்பிக்கை வந்தது. அந்த தைரியத்திற்கு காரணம் அந்த தோல்விகள்தான். வெற்றி தோல்விகள் எல்லாமே நம்மளுடைய வாழ்க்கையில் இருக்கும். அதை நாம் எப்படி பார்த்துக் கொண்டு அதிலிருந்து வெளியில் வருவது தான் நாம் பார்க்கக்கூடிய விஷயம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement