தமிழில் மாதவன் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘யாவரும் நலம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு விஷ்ணு என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதன்பின்னர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். யாவரும் நலம் திரைப்படத்திற்குப் பின்னர் தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரின் படத்திலும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் பாருங்க : சிம்புவுக்கு எதிராக திரும்பிய தயாரிப்பாளர்கள்.! சிம்பு, தயரிப்பாளர்களுக்கு போடும் 4 கண்டிஷன் என்ன தெரியுமா? கேட்டா காண்டாவீங்க.!
தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தேன் இவருக்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைய ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இறுதியாக தமிழில் சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார் நடிகை நீது சந்திரா.
2017 க்கு பிறகு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் பிரபல தொலைக்காட்சியில் டிடி ரங்கோலி என்ற ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின்னர் சினிமா துறையில் இருந்து மொத்தமாக விலகினார். இருப்பினும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் நீது சந்திரா.