ஏ ஆர் ரஹ்மான் மட்டுமல்ல, இளையராஜாவும் என் பாட்டை சாட்டிலைட் மூலம் திருடிவிட்டார் – நீயா நானாவில் வந்த இவரை மறக்க முடியுமா ? இதோ அவரின் பேட்டி.

0
1929
iqbal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் வாரா வாரம் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான மற்றும் பிடித்தமான நிகழ்ச்சி என்று தான் சொல்லணும். பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் துவங்கி சர்வதேச பிரச்சினைகள் வரை விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விவாத நடுவராக கோபிநாத் செயல்பட்டு வருகிறார்.

-விளம்பரம்-

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பல்வேறு தலைப்புகள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறது.

- Advertisement -

நீயா நானா புகழ் இக்பால்:

அந்தவகையில் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இக்பால். இவர் நீயா நானா நிகழ்ச்சியில் பேச்சாளராக பங்குபெற்று இருந்தார். அப்போது அவர், நான் எதார்த்தமாக பாடும் பாடல்களை எனக்கே தெரியாமல் திருடி அதை சினிமாவில் கொண்டு வந்து இருக்கிறார்கள். சாட்டிலைட் மூலம் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இக்பால் அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா இக்பால் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நான் இப்போது பாட்டு எழுவதை விட்டு விட்டேன். நான் இப்போது பெயிண்டிங், கட்டட வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். 30 வருடமாக நான் பெயிண்டிங் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய குடும்பத்திற்கு தேவையான வருமானம் பற்றவில்லை என்று தான் பாட்டு எழுதினேன். தனியாக ஏரிகரை, வயல்வெளி, மரத்தடியில் உட்கார்ந்து எல்லாம் எனக்கு தோன்றுவதை பாட்டாக எழுதினேன்.

-விளம்பரம்-

என் பாட்டை திருடி விட்டார்கள்:

அதை தான் சினிமாவில் பாடி இருக்கிறார்கள். நான் கடைசியாக எழுதிய பாடல் அழகிய தமிழ் மகனில் வந்திருந்த எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே பாடல் தான். முதலில் நான் ரோஜா படத்தில் வந்த காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே பாடல். அந்த பாடலை நான் முதன்முதலாக எழுதினேன். அப்போது எனக்கு மணிரத்தினம் அறிமுகமானார். அப்படியே என்னை ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகப்படுத்தி இருந்தார். அப்போது தான் அவர்கள் என் பாட்டை பயன்படுத்தியது தெரிந்தது. என் பாட்டை மட்டும் இல்லாமல் என் டுயூனையும் சேர்த்தி திருடி விட்டார்கள். நான் பாடல் போடும் போது டியூன் போட்டு விடுவேன். இளையராஜாவும் நான் எழுதிய நிறைய பாடல்களை சினிமாவில் பாடி இருக்கிறார்.

எம்ஜிஆர் உடைய வாரிசு:

இப்படி நான் எழுதிய எல்லா பாடல்களும் எப்படி சினிமாவில் வருகிறது என்ற குழப்பம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. பிறகு தான் அவர்கள் என்னை சாட்டிலைட் மூலம் வாட்ச் பண்ணி நான் பாடுவதை ட்யூனுடன் திருடி விடுகிறார்கள். அதனால் பத்து வருடமாக நான் பாடலை நிறுத்திவிட்டேன். அதற்கு பின் அங்கேயும் நல்ல பாடல் இல்லை. இப்படி என் திறமையை திருடியதற்கு நான் எந்த ஒரு வழக்கையும் போடவில்லை. அதோடு ஏ ஆர் ரகுமான் வாங்கிய ஆஸ்கார் விருதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. ஒரு பக்கம் நான், இன்னொரு பக்கம் என் அப்பன் எம்ஜிஆர். நான் எம்ஜிஆர் உடைய வாரிசு. நான் தலைவனுடைய வாரிசு தான் என்பதை எல்லோரும் வெளியுலகிற்கு கொண்டு வாருங்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

Advertisement