விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது “நீயா நானா” நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதிலும் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.
ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா”. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிராக இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சி:
இப்படி கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் தரப்பிலும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த வாரம் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படங்களில் வரும் தத்துவப் பாடல்களைப் பற்றிய விவாதிக்க இருக்கிறார்கள்.
விஜயகாந்த் பாடல்:
இதில் ஒரு பக்கம் தத்துவ பாடல்களை பாடுபவர்களும், இன்னொரு பக்கம் தத்துவ பாடல்களை ரசிக்கும் ரசிகர்கள் என்று இரு தரப்பினும் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். மேலும், தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற புரட்சிகரமான தத்துவ பாடல்களை பற்றிய விவாதம் தான் நடந்து கொண்டிருந்தது. அப்போது மறைந்த நடிகர் விஜயகாந்தின் நடிப்பில் வெளிவந்த அலை ஓசை படத்தில் இடம்பெற்ற ‘போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற பாடலை கோபிநாத் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் பலருமே பாடி இருந்தார்கள்.
அலை ஓசை படம்:
இந்த பாடல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முழு எபிசோடையும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். கடந்த 1985 ஆம் ஆண்டு சிறுமுகை ரவி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் தான் அலை ஓசை. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற போராடடா ஒரு வாளேந்தடா என்ற பாடல் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் எழுச்சிக்காக உருவாக்கப்பட்டது.
விஜயகாந்த் குறித்த தகவல்:
இன்று வரை இந்த பாடல் மக்கள் மத்தியில் ஒழிக்கப்பட்டு தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலின் பின்னணியை மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆக இரு படங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோட ஏற்கனவே மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவை ஒட்டி விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.