குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது சன் டிவியின் புதிய குக்கு ஷோவில் வெங்கடேஷ் பட் கலந்துகொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் என்று புது கோமாளிகள் இணைந்துள்ளனர்.இந்த சீசனில் ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர்.
அதே போல இந்த சீசனில் செப் தாமுவுடன் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி இருக்கிறார். இந்த சீசன் துவங்கும் முன்பே இந்த நிகழ்ச்சியில் இனி தான் பங்குபெற போவது இல்லை என்று வெங்கடேஷ் பட் அறிவித்து இருந்தார். விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் Media Masons 10 நிறுவனம் தான் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தயாரித்து வந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக Media Masons தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற புதிய நிகழ்ச்சியை துவங்கி இருக்கின்றனர்மேலும், இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட்டின் VB Dace நிறுவனம் தான் தயாரிகிறது. வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக்கு வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், GP முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலரை களமிறக்கி இருக்கிறது.
இப்படி இரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவிற்கு பின் பதிவு ஒன்றை போட்டுள்ள வெங்கடேஷ் பட் கன்டன்ட் தான் என்று ராஜா, ஒரிஜினல் கண்டன்ட் தான் பேரரசர். மீடியா மேசன் வழங்கும் ஒரு புத்தம் புது நிகழ்ச்சி என்று குறிப்பிட்டதோடு #VictoryForOriginality என்ற ஹேஷ் டேக்கையும் போட்டுள்ளார். அதே போல இந்த நிகழ்ச்சியின் பேனரில் வெங்கடேஷ் பட் நடத்தி வரும் VB Dace நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.
எனவே, இந்த நிகழ்ச்சியை அவர் தான் தயாரிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து பேசியயுள்ள Media Masons நிறுவனத்தை சேர்ந்த ரவூஃபா ‘ மீடியா மேஷன்ஸ்’ நிறுவனம்தான் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கவிருக்கிறது. எங்களுடைய மீடியா பணியில முதல் முறையாக பிரபல சேனலான சன் டிவியுடன் சேர்ந்திருக்கிறோம். எங்களுடைய நிகழ்ச்சியில் போட்டி மும்முனையாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். அதனால் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போட்டியாக இதைப் பார்க்க வேண்டியதில்லை’ என்றும் கூறியுள்ளார்.