என்கிட்ட அதிகாரம் இருந்துச்சி,அனைவருக்கு ஆயுள் தண்டனை தான் – ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடும் பெண்கள் குறித்து ரஞ்சித் கருத்து. விஜய் ஆண்டனி பதில்

0
245
- Advertisement -

ஹாப்பி ஸ்ட்ரீட்டில் பெண்கள் நடனமாடுவது குறித்து நடிகர் ரஞ்சித் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில் தற்போது இதுகுறித்து பதிலடி கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. தமிழகம் முழுவதும் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சார நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடனம், பாடல், கலை நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் மக்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து நடிகர் ரஞ்சித் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பது, சமீப காலமாக ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு முடுக்கிலுமே ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி :

நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் அம்மா, அப்பா யார்? பெண் குழந்தைகளை அரைகுறை ஆடைகளுடன் தெருவில் ஆட விடுவது எல்லாம் மன வேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன். யார் மகனோ யாருடனோ ஆடுவது? யார் பெண்ணோ யாரோ ஆடலாம்? அது தான் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மன அழுத்தத்தை போக்க தெருவில் கூத்தடிப்பது தான்.

நடிகர் ரஞ்சித் பேட்டி:

இந்த நிகழ்ச்சி எதிர்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு போகும். ஒரு தாய்லாந்து போலவோ, சிங்கப்பூரை போலவோ மாறிவிடும். அப்படி வரக்கூடாது, வரவும் விடமாட்டோம் என்று கடுமையாக ரஞ்சித் பேசி இருக்கிறார். ரஞ்சித்தின் இந்த கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது. ஒரு சிலர் இவரின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் கடுமையாக விமர்சித்தனர்.

-விளம்பரம்-

விஜய் ஆன்டணி கருத்து :

இப்படி ஒரு நிலையில் ரோமியோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற விஜய் ஆன்டனியிடம் ஹாப்பி ஸ்ட்ரீட்டில் பெண்கள் நடனமாடுவது குறித்து நடிகர் ரஞ்சித் பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி ‘ காசு இருக்கவங்க ஸ்டேஜ் போட்டு இசை நிகழ்ச்சி நடத்துவாங்க. காசு இல்லாதவங்க இந்த மாதிரி ரோட்ல நடத்துறாங்க.

கண்ண மூடிகோங்க :

நம்ம மனசுக்கு புடிச்சத எதுவா இருந்தாலும் செய்யலாம். அதுவும் அது இன்னொருத்தரை பாதிக்காது என்றால் அதை தைரியமாக செய்யலாம். அதே போல ஆடை அணிவது பெண்களின் சௌகரியம். அதை பற்றி நாம் கருத்து தெரிவிக்க தேவையில்லை. உங்களுக்கு பிடிக்கலன்னா கண்ண மூடிகோங்க’ என்று பேசி இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவரின் இந்த பேச்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement