வற்றிப்போன ‘தமிழ் கடல்’ – காலமானார் நெல்லை கண்ணன். சோகத்தில் தமிழ் மக்கள்.

0
825
nellaikannan
- Advertisement -

தமிழ் கடல், பட்டிமன்ற நடுவர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமாக திகழ்ந்தவர் ‘தமிழ் கடல் நெல்லை கண்ணன். இவருடைய பெற்றோர்கள் சுப்பையா பிள்ளை, இலக்குமி அம்மையார் ஆவார். இவர்களுக்கு நான்காவது மகனாக கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் நெல்லை கண்ணன். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதன்பின் பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையுமே பயின்றார். பின் இவர் சிறந்த பேச்சாற்றல் மிக்கவராக திகழ்ந்தார். நெல்லை கண்ணன் ஏராளமான பட்டிமன்றங்களில் நடுவராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

மேலும், அரசு தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக பலமுறையும் இருந்திருக்கிறார். இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராசர், பாடலாசிரியார் கண்ணதாசன் ஆகியோருடன் நெருங்கிய பழக்கம் உடையவர். இவர் 1970 காலகட்டத்திலேயே தமிழ் மேடைகளில் பேச ஆரம்பித்தவர். இவருடைய தமிழ்ப் புலமையை பார்த்து பலரும் இவரை தமிழ்கடல் என்று அழைத்தனர்.

கம்பராமாயணம் முதல் எந்த இலக்கியமாக இருந்தாலும் ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக பேசும் புலமை கொண்டவர். இவர் அரசியல் ரீதியாகவும் கொள்கை துணிவு கொண்ட பேச்சாளராக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக பல்வேறு தலைவர்களையும் இவர் கடுமையாக விமர்சித்து இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக செயல்பட்டிருந்தார். பின் மறைந்த திமுக தலைவர் கலைஞர் உடன் பல்வேறு முறை கருத்து மோதல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அதேபோல் கடந்த 2020இல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய மாநாட்டில் நெல்லை கண்ணன் பேசியிருந்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதனால் அவருக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவரின் தமிழ் ஆற்றலுக்கு நிறைய விருதுகளை பெற்று இருக்கிறார். சமீபத்தில் தான் அவருக்கு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது கிடைத்திருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலியில் உள்ள அவருடைய இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நெல்லை கண்ணன் காலமாகி இருக்கிறார். தற்போது இவருக்கு 77 வயதாகிறது. அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு பல அரசியல்வாதிகள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement