என்ன இப்படி பண்ண லோகேஷ் தேவைப்படுறார் – ட்ரோல்கள் குறித்து நெல்சன் சொன்ன விஷயம்.

0
1364
- Advertisement -

லோகேஷ் உடன் தன்னை ஒப்பிடுவது குறித்து இயக்குனர் நெல்சன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் என்ற சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

நெல்சன் விமர்சனம்:

இதனால் நெல்சனை பயங்கரமாக விமர்சித்து ட்ரோல் செய்திருந்தார்கள். இன்னொரு பக்கம் சினிமாவில் லோகேஷ் உடைய வளர்ச்சி நன்றாக இருந்ததால் அவருடன் நெல்சனை ஒப்பிட்டு எல்லாம் விமர்சித்து இருந்தார்கள். நெல்சனை தாழ்த்தியும் லோகேஷை உயர்த்தியும் பேசி சோசியல் மீடியாவில் மீம்ஸ் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து நெல்சன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

நெல்சன் அளித்த பேட்டி:

அதில் அவர் லோகேஷ் உடன் ஒப்பிட்டு பேசுவது கொடுத்து கூறியது, லோகேஷ் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவரை இப்போது காஷ்மீரில் லியோ படத்தினுடைய பேட்ச் ஒர்க்கில் இருக்கிறார். இல்லையென்றால் அவரையும் கூப்பிட்டு ஜெயிலர் படத்தை காண்பித்திருப்பேன். நிறைய நேரங்களில் அவர் பிசியாகவே இருப்பார். நான் என்னுடைய வேலைகளை செய்து கொண்டிருப்பேன். எங்களை இணைப்பது அனிருத் தான். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது நன்றாக பேசிக் கொள்வோம்.

-விளம்பரம்-

லோகேஷ் குறித்து சொன்னது:

லோகேஷ் என்னைப் போலவோ அல்லது அவரைப் போல் நானும் படம் எடுப்பதில்லை. அவர் எடுக்கக்கூடிய படங்கள் தனி ஜானராக இருக்கிறது. என்னுடைய பாதை வேறு. இரண்டும் வெவ்வேறானவை. மொத்தமாக பார்க்கும் பொழுது என்னை திட்டுவதற்கு அவர் தேவைப்படுவார். அவரை திட்டுவதற்கு நான் தேவைப்படுவோம். அவ்வளவுதான் இதை நான் ஒரு ஹெல்த்தியான ட்ரெண்டாக தான் பார்க்கிறேன். எங்களைத் தவிர தற்போது புது இயக்குனர்கள் பலர் நன்றாக படம் எடுக்கிறார்கள்.

சினிமா குறித்து சொன்னது:

ஆனால், கமர்சியல் படங்களை எடுக்கும் இயக்குனராக மாறும் பட்சத்தில் அதற்கான ரீச் தான் வேற மாதிரியாக இருக்கிறது. தற்போது இருக்கக்கூடிய எல்லா இயக்குனர்களிடமும் நான் பேசுவேன். அவர்களும் என்னிடம் பேசுவார்கள். எங்களுக்குள் இறுக்க தன்மை என்பது பெரிதாக கிடையாது என்று பேசி இருக்கிறார். தற்போது ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது.

Advertisement