தான் விவசாயம் செய்யும் இடத்தில் மகளின் திருமணத்தை நடத்தும் அருண் பாண்டியன் – எங்கு தெரியுமா ?

0
2092
Arunpandian
- Advertisement -

அசோக்செல்வன்- கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்து திருமணம் வரை சென்றதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வருகிறது. பொதுவாகவே பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமான ஒன்றுதான். பாக்யராஜ்-பூர்ணிமா, அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா, சினேகா- பிரசன்னா, சமீபத்தில் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன். இவர்கள் வரிசையில் தற்போது அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இணைய இருகிறார்கள்.

-விளம்பரம்-

கோலிவுட் முழுவதும் இவர்களுடைய காதல் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் கதாநாயகனாக மாறினார். அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் ஓ மை கடவுளே.

- Advertisement -

அசோக் செல்வன் நடித்த படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடித்திருந்த படம் போர் தொழில். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது அசோக் செல்வன் அவர்கள் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் காதல்:

இந்தப் படத்தை எஸ் ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும், இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடுக்ஷன் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் போதுதான் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்களாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம்:

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் பா ரஞ்சித் தான் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வருகிற செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இவர்களது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. திருநெல்வேலியில் இவர்களது கல்யாணம் நடைபெறவிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் எங்கே :

அதாவது அடுத்த மாதம் 13ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள சேது அம்மன் பண்ணையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடைய திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெறஇருப்பதாகவும். இதை அடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement