ஜெயிலர் படத்தில் ப்ளாஸ்ட் மோகன் கதையை டாக்டர் படத்தின் போதே நெல்சன் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், கன்னட ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் படம்:
இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் படத்தின் இருக்கிறார். இந்தப் படத்திற்காக நெல்சன் மெனக்கட்டிருப்பதை குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் ஆகியோரை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
படத்தின் வெற்றி விழா:
அது மட்டும் இல்லாமல் அவர்கள் அனைவருக்குமே காரை பரிசளித்திருக்கிறார். பின் ஜெயிலர் படத்தில் இருந்து தனக்கு வந்த லாபத்தில் மூலம் விருப்பப்பட்ட தொகையை அவர்களுக்கு காசோலையாகவும் கொடுத்து இருக்கிறார். பின் ஜெயிலர் படத்தின் வெற்றியடைந்து படக்குழுவினர் கொண்டாடி இருந்தார்கள். பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே ஜெயிலர் படத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிளாஸ்ட் மோகன் ரோல்:
மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் சுனில் அவர்கள் பிளாஸ்ட் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் ஹீரோ மாதிரி. இவர் தமன்னாவை காதலிப்பார். அதனால் இவர் தமன்னாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த தன்னுடைய அசிஸ்டன்ட் மூலம் கிப்டுகளை கொடுத்து அனுப்புவார். ஆனால், அவர் அதை பயன்படுத்திக் கொண்டு தமன்னாவை ப்ரபோஸ் செய்வார்.
வைரலாகும் வீடியோ:
தமன்னாவும் அவரை காதலித்து விடுவார். பின் ஒரு நாள் இந்த உண்மை பிளாஸ்ட் மோகனுக்கு தெரிய வருகிறது. இதனால் அவர் மனம் உடைந்து விடுவார். இந்த நிலையில் இந்த கதையை நெல்சன் அவர்கள் டாக்டர் படத்தின் போதே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அப்போது அவர் வினய்- பிரியங்கா மோகனை வைத்து எடுப்பது மாதிரி பேட்டியில் கூறி இருந்தார். தற்போது இதை ஜெயிலர் படத்தில் செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.