உதயநிதி அந்த காலத்து அரசியல் செய்கிறார். முதலில் உழலை ஒழியுங்கள் அப்புறம் சனாதனத்தை ஒழிக்கலாம் – பிரேமலதா விஜயகாந்த். 

0
1442
- Advertisement -

உதயநிதி உங்க கிட்ட நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம் லேட்டஸ்ட் அரசியலுக்கு வாருங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் அவருக்கு கூறியுள்ளார். இன்று நடைபெற்று வந்த மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்திக்கும் போது எவ்வாறு கூறினார். முதலில் இதை எல்லாம் செய்யுங்கள் அதன் பிறகு அதை பற்றி பேசுங்கள் என்றும் உதயநிதியை பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

-விளம்பரம்-

பிரேமலதா விஜயகாந்த் கூறியது:    

சனாதனத்தில் ஒழிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது இந்தியா முழுவதும் பரவி வைரல் ஆகியது. தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நான் உங்களிடம் ஒன்று கூறுகிறேன் உதயநிதி அவர்களே நீங்கள் இளம் தலைமுறை சேர்ந்தவர் நீங்கள் இன்னும் பழைய அரசியலில் இருந்து புதிய அரசியல் இருந்து மாறுங்கள். இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்கள் நீங்கள் அதிக அளவில் வளர்ச்சியை கொண்டு வருவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

- Advertisement -

நீங்கள் இன்னும் பழைய அரசியலில் இருந்து வருகிறீர்கள். நீங்கள் சனாதனத்தை ஒழிப்பதற்கு முன்பாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக ஒழிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமானதாக இருக்கிறது. அது என்ன என்னவென்று நான் சொல்கிறேன். லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும். மது கடைகளை ஒழிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்க வேண்டும். குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை ஒழிக்க வேண்டும். எல்லாருக்கும் சமத்துவமான கல்வி மருத்துவத்தை தர வேண்டும்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தற்போது ஆட்சியில் இருக்கும் நீங்கள் மக்களுக்காக செய்ய வேண்டியது ஏகப்பட்டது இருக்கிறது. தற்போது சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலுக்கான வேலையைத்தான் இப்போது தொடங்குகிறார்கள். அடுத்த தலைமுறை இளைஞர்கள் காண விஷயத்தை இவர்கள் கையில் எடுக்க மறுக்கிறார்கள். இங்கு இவ்வளவு பேர் இருக்கின்றோம் இவர்களில் யாருக்காவது சனாதனம் என்பதும் பொருள் தெரியுமா. யாருக்கும் தெரியாது.

-விளம்பரம்-

ஏன் இதைப் பற்றி நான் பேசுகிறேன் என்றால் மக்களிடையே எந்த ஒரு பாகுபாடும் இங்கு இல்லை. ஜாதியாலையும் மத்ததலையும்  மொழியாலையும் நமக்குள் இங்கு எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. நம்மளுடைய கேப்டன் கூறியது போல் ஒருவரிடம் மூச்சுக்காற்றில் என்ன  வேறுபாடு இருக்கிறது. அடுத்த தேர்தலுக்காக தேவை இல்லாமல் சாதனத்தை பற்றி இப்போது பேசி வருகின்றார்கள். மக்களைப் பிரிக்க நினைப்பது அனைத்து ஆளுங்கட்சியாக இருக்கின்ற திமுக கட்சி தான்.

சமாதானத்தை ஒழிப்பதற்கு முன் மக்களுக்கு இந்த ஆட்சி செய்ய வேண்டியது ஏராளமானவை உள்ளது. முதலில் மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யுங்கள் அதை விட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டு இந்த அரசியல் செய்து வருகிறீர்கள். அடுத்த தேர்தலுக்காக கவிதை கையில் எடுப்பதை விட்டுவிட்டு அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுங்கள் என்பது தான் இந்த நேரத்தில் நாங்கள் கேட்டு கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

Advertisement