‘இதுவரை நான் பார்த்த ஜோடிகளிலேயே’ – விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் முதல் திருமண நாளைக்கு லவ் டுடே இயக்குனர் அனுப்பிய பரிசு.

0
1901
Pradeep
- Advertisement -

சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கனெக்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

- Advertisement -

தனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள்.

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருந்தனர்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து முதன் முறையாக தங்கள் மகன்களின் முகத்தை காட்டி இருந்தார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் நயன்தாராவின் முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் லவ் டுடே படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு இனிப்புகளை அனுப்பி வாழ்த்து குறிப்பு ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

அதில் நான் பார்த்ததிலேயே மிகவும் இனிமையான மற்றும் அன்புமிக்க ஜோடிக்கு நிறைய இனிப்புகளை அனுப்பி வைக்கிறேன். இனிய முதலாம் ஆண்டு திருமண நாளுக்கும் இதே போல இனி வர இருக்கும் அழகான வருடங்களுக்கும் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரதீப் ரங்கநாதன் அனுப்பிய இந்த வாழ்த்து குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்த்துள்ள விக்னேஷ் சிவன் அவருக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement