பிரபல இயக்குனரின் பிறந்தநாள். கேக் ஊட்டி கொண்டாடிய பிரியா பவானி ஷங்கர். வைரலாகும் புகைப்படம்.

0
13575
priyabhavani

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்து சாதனைகள் புரிந்தவர் பல பேர் உள்ளார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தான் முதலில் நடித்தார். பிறகு தான் இவருக்கு 2017 ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளிவந்த ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் தனது புதிய படத்தின் இயக்குனரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளார். மேலும், பிறந்தநாள் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா,பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.

Image

- Advertisement -

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காற்றின் மொழி படத்தை இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன். மேலும்,காற்றின் மொழி படம் சூப்பர் டூப்பர் படமாக அமைந்தது. இந்த ஆண்டு அவர் ஒரு புது படைப்பை கொடுக்க உள்ளார். இதனை தொடர்ந்து ராதாமோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா வைத்து ஒரு புது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாபியா படத்தில் கூட அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்நிலையில் ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகி வரும் பொம்மை படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் என்று அறிவித்துள்ளார்கள்.

இதையும் பாருங்க : சினிமாவில் வருவதர்க்கு முன்பாக நயன்தாரா இப்படி ஒரு வேலையை செய்து வந்தாரா. வைரலாகும் வீடியோ.

மேலும், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன். இந்த பொம்மை படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மேலும்,பிரியா பவானி சங்கர் தவிர மற்றொரு கதாநாயகியாக சாந்தினி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் இயக்குனர் ராதா மோகனின் பிறந்தநாளை கொண்டாடினர். எனவே, படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி ராதாமோகனின் பிறந்த நாளை கொண்டாடினர். இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவனி சங்கர் உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர்.

-விளம்பரம்-
Image

Image

அப்போது எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும்,அதில் பிரியா பவனி சங்கர் உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் 1964 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் பொம்மை. எனவே இந்த பொம்மை படம் தலைப்பை வைக்க பேச்சுவார்த்தை தற்போது வரை நடைபெற்று வருகிறது. மேலும், படத்தின் தலைப்பு ஓகே ஆனதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள் படக்குழுவினர். மேலும், பிரியா பவானி சங்கர் இதுவரை அவர் நடித்த படங்களில் ஹோம்லி லுக்கில் தான் அதிக வலம் வருகிறார். அது மட்டுமில்லாமல் சினிமாவில் நுழைய கவர்ச்சி காட்டாமல், நல்ல நடிப்பு இருந்தால் போதும் என்று ரசிகர்களை கவரலாம் என்பதற்கு உதாரணமாக பிரியா பவானி சங்கர் இருக்கிறார்.

Advertisement