செல்வராகவனின் பிறந்தநாளில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ – முழு விமர்சனம்

0
1652
nenjam
- Advertisement -

எஸ் ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் இன்று (மார்ச் 5) வே;வெளியாகி இருக்கிறியாது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு சிக்கலை சந்தித்து. எனை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டனர். மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சுமுக உடன்பாடு ஏற்படவே, நீதிமன்றத்தை நாடினார்கள். உடனடியாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி இன்று வெளியாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வ ராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

கதை களம் :

கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார் மரியம் (ரெஜினா கசான்ட்ரா) கடவுள் பக்தி அதிகம் உள்ளவராக இருக்கும் ரெஜினா தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக செலவு செய்கிறார். மற்றொரு புறம் படத்தின் நாயகன் ராம்சே  (எஸ் ஜே சூர்யா ) பணக்கார பெண்ணான ஸ்வேதாவை ( நந்திதா) திருமணம் செய்துகொள்கிறார். இந்த தம்பதியருக்கு 4 வயதில் ஆண்குழந்தை இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள கேர் டேக்கராக மரியமை (ரெஜினா கசான்ட்ரா) அணுகுகிறார் ராம்சே  (எஸ் ஜே சூர்யா ) தங்களது குழந்தையை பார்த்துக்கொள்ள பெரும் பணம் தருவதாக கூறியதால் அந்த வேலைக்கு ஒப்புக்கொள்கிறார் மரியம் (ரெஜினா கசான்ட்ரா). இதனிடையே சபல குணம் படைத்த நாயகன் ராம்சேவிற்கு (எஸ் ஜே சூர்யா ) மரியம் (ரெஜினா கசான்ட்ரா) மீது ஆசை வருகிறது.

மரியம்மை அடைய வேண்டும் எனராம்சே மரியமிடம் சில்மிஷம் செய்ய முயற்சிக்கும்போது மரியம் விலகிச் செல்கிறார். இந்த போக்கின் உச்சகட்டத்தில் ராம்சே மரியம்மை கொலைசெய்து விடுகிறார். தன்னை கொலை செய்த ராம்சேவை பழிவாங்க மரியம் ஆவியாக வருகிறார். மரியம் ஆவியாக வந்து ராம்சேவை பழி வாங்குகிறாரா? இல்லையா? என்பதை தன்னுடைய வித்யாசமான திரைக்கதையுடன் சொல்லி இருக்கிறார் செல்வராகவன்.

பிளஸ் :

படத்தின் பிளஸ் என்றால் அது எஸ் ஜே சூர்யா தான், பலரும் சொல்வது போல இயக்குனர் எஸ் ஜே சூர்யாவை விட நடிகர் எஸ் ஜே சூர்யா பலே என்பதை நிரூபித்துள்ளார்.

நந்திதா நடிப்பை விட ரெஜினா நடிப்பு பலே

படத்தின் அடுத்த ஹீரோ என்றால் அது யுவன் தான், பாடல்களை ஏற்கனவே கேட்டிருப்பீர்கள். படத்தில் திரில்லர் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் யுவன்.

வித்யாசமான திரைக்கதை, படத்தின் கிளைமாக்ஸ் மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக அமைந்துள்ளது.

மைனஸ் :

செல்வராகவனின் ட்ரேட் மார்க் வித்யாசமான திரைக்கதை இருந்தாலும் நல்லவனை கொன்று பின்னர் அது பேயாகி கெட்டவனை பழி வாங்கும் அதே பழைய கதை தான்

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சுவாரசியம் இல்லை. அதை கிளைமேக்ஸ்ஸில் அட்ஜஸ்ட் செய்துள்ளார் செல்வா.

திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு,

இறுதி அலசல் :

தமிழ் சினிமாவில் பழி வாங்கும் பேய் கதைகளை நாம் பலவற்றை கண்டுள்ளோம், எனவே, இதுவும் வித்யாசமான கதை இல்லை. அதனை தன்னுடைய ஸ்டைலில் கொஞ்சம் மண்டைக்காரனா யோசித்து கொடுத்திருக்கிறார் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி படத்தை எல்லாம் மறந்துவிட்டு இந்த படத்தை பார்க்கலாம். மொத்தத்தில் நெஞ்சம் மறப்பதில்லை – பார்த்த சில நாளில் மறந்துவிடலாம்.

Advertisement