நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் தேதி.! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.!

0
893
Nerkonda-Paarvai
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும், இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது நாம் பலரும் அறிந்த ஒரு விடயம் தான்.

-விளம்பரம்-

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். மேலும், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், போன்ற பல்வேறு நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பின் வேறு எந்த அப்டேடும் வெளியாகவில்லை.

- Advertisement -

படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் படத்தின் ட்ரைலர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் இன்று (ஜூன் 12 )மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். எதிர்பாராத வேலையில் இப்படி ஒரு அப்டேட் வந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement