தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். சூப்பர் ஹிட் படங்களான வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியவரும் இவர் தான். பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை என்ற படத்தை எஸ்.ஜே.சூர்யா அவர்களே எழுதியும், இயக்கியும், இசையமைத்தும் நடித்து உள்ளார். பின் தொடர்ந்து மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா.
கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளி வந்த மான்ஸ்டர் படம் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து காற்றின் மொழி படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா வைத்து “பொம்மை” படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த பொம்மை படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.
இது ஒருபுறமிருக்க இயக்குனர் எஸ் ஜே சூர்யா பிரியா பவானி சங்கர் ஐ திருமணம் செய்துகொள்ள கேட்டதாகவும் ஆனால் அதனை மறுத்த பிரியா பவானி சங்கர் எஸ் ஜே சூர்யாவின் அப்பா ஸ்தானத்தில் பார்ப்பதாகவும் கூறினார் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் செய்திகள் வைரலாக பரவியது அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் பொம்மை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட எஸ் ஜே சூர்யா பொம்மை படத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷாவின் நடிப்பு தெரிந்தது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள எஸ் ஜே சூர்யா, ஒரு சில முட்டாள்கள் நான் பிரியா பவானி சங்கரை திருமணம் செய்து கொள்ள கேட்டதாகவும் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் பொய்யான செய்தியை பரப்பி உள்ளார்கள். அவர் மான்ஸ்டர் படத்தில் இருந்து என்னுடைய நல்ல தோழி. மேலும் அவர் சிறந்த நடிகையும் கூட. இது போன்ற ஆதாரமில்லாத வதந்திகளை பரப்பி எரிச்சல் செய்ய வேண்டாம். நன்றி என்று பதிவிட்டுள்ளார்.