விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
அதோடு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. பின் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார்.
விருது வழங்கிய விஜய்:
இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது. அந்த விழாவில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும், அரசியல் குறித்தும், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நேத்ரா பொறியியல் கல்லூரியில் முதலிடத்தை பிடித்திருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட விருது விழாவில் தகுதியும் திறமையும், மதிப்பெண்கள் எடுத்தும் பல மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நேத்ரா மாணவி எடுத்த மதிப்பெண்:
அந்த வரிசையில் பிளஸ் டூ தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்களை பெற்ற நேத்ரா மாநில அளவில் இரண்டாவது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால், இவரை விஜய் மக்கள் இயக்கத்தினர் புறக்கணித்து இருக்கிறார்கள். தற்போது இவர் பொறியியல் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இதில் 1.5 லட்சம் இடங்கள் இருக்கிறது.
பொறியியல் தர வரிசை பட்டியல்:
அதன்படி 2023-2024 ஆம் ஆண்டு கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதமே இதற்கான விண்ணப்ப பதிவு நடந்திருக்கிறது. இந்த நிலையில் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது. இதில் 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் 102 பேர் பெற்று இருக்கிறார்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றிருக்கிறாள். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரை அடுத்து ஹரணிகா என்ற மாணவி இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். ரோஷினி பானு என்ற மாணவி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நேத்ரா பொறியியல் தரவரிசையில் முதலிடத்தை பெற்றிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.