போட்டோ எடிட்ல என்ன வேனா பண்ணலாம் – தன் Transformationஐ கேலி செய்தருக்கு குஷ்பூ கொடுத்த பதிலடி.

0
3614
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாக கொஞ்சம் குண்டாக இருந்த குஷ்பூ சமீபத்தில் உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருந்தார். குஷ்பூவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட பலரும் வியந்து போனார்கள். அதிலும் ஒரு ரசிகர், ஒருவர் குஷ்பூவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி கமன்ட் செய்தார். அதற்கு குஷ்பூ, நீங்க ரொம்ப லேட், என் கணவர் சம்மதிக்க மாட்டார் என்று மிகவும் கூலாக பதில் அளித்து இருந்தார்.

இதையும் பாருங்க : 5,10 இல்ல மொத்தமாக 37 கிலோவை குறைத்த சீக்ரெட் சொன்ன நடிகை (இவங்க குரல் Vj சித்ரா மாதிரியே இருக்கே)

- Advertisement -

இப்படி குஷ்பூவின் transformation-ஐ பார்த்து பலர் பாராட்டி வந்த நிலையில் குஷ்பூவின் இந்த பதிவிற்கு சில ட்ரோல் கமன்ட்டுகளும் வந்தது. அந்த வகையில் குஷ்பூயின் இந்த புகைப்படத்திற்கு ட்விட்டர் வாசி ஒருவர், இது ஒன்னும் கிடையாது. ஆனால், தற்போது உள்ள காலகட்டத்தில் போட்டோ எடிட்டில் எதுவும் சாத்தியம் தான் என்பதற்கு இது உதாரணம் என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கும் கூலாக பதில் அளித்த குஷ்பூ, சில முட்டாள்கள் எப்படி எதிர்மறை மற்றும் தாழ்வு மனப்பான்மையால் நிரப்பப்படுகிறார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணத்தை அமைத்துள்ளீர்கள் என்று நச் என்று தன்னை கேலி செய்தவர் பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement