தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.
இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.
நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் ‘ எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகா தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார். இதனால் பூஜா மீது சமந்தா ரசிகர்கள் கடும் கடுப்பில் ஆழ்ந்தனர்.ஆனால், நடிகை பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டது. அதனால் அதில் வரும் பதிவுகளை கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவு ஒன்றை செய்திருந்தார்.
இந்த பதிவை போட்ட அரை மணி நேரத்தில், தனது இன்ஸ்டகிராம் கணக்கு சரி செய்யபட்டுவிட்டது என்று கூறி அந்தர் பல்டி அடித்துவிட்டார்.இருப்பினும் பூஜா, சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்கள் ட்விட்டரில் #PoojaMustApologizeSamantha என்ற ஹேஸ் டேக்கை கூட ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பூஜா ஹெக்டே எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘peace’ என்று குறிப்பிடும் வகையில் இரண்டு விரல்களை காண்பித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவு பூஜா ஹெக்டேவுக்கு கொடுத்த பதிலடி தான் என்று சமந்தாவின் ரசிகர்கள் கமன்ட் செய்து வந்தனர் இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி, பூஜா ஹெக்டே குறிப்பிட்டிருந்த ‘Pretty’ என்ற வார்த்தையை குறிப்பிட்டு சமந்தாவை வர்ணிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.
இந்த பதிவின் கமெண்டில், நடிகை சமந்தா, பூஜா ஹெக்டேவை மறைமுகமாக தாக்கும் வகையில் சில கமன்ட்களை பதிவு செய்தார். இவர்கள் இருவரும் பூஜா ஹெக்டேவை தான் தாக்கி பேசுகிறார்கள் என்று ரசிகர்களுக்கும் புரிந்தது. இந்த நிலையில் இந்த பதிவிற்கு கமன்ட் செய்த சின்மயி, என்னுடைய கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்னையும் காதலியுங்கள் என்று கூறி இருந்தார்.
சமந்தா மற்றும் நந்தினி ரெட்டியுடன் இணைந்து சின்மயியும் பூஜா ஹெக்டேவை மறைமுகமாக கிண்டலடித்தார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்ய ஆரம்பித்தனர். மேலும், ரசிகர் ஒருவர், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து பேசிய சிலர் தற்போது தோழிகளுடன் சேர்ந்து மற்ற ஒரு பெண்ணை கேலி செய்கிறார்கள் என்று சின்மயிடம் ட்விட்டரில் கேட்க அவரை பிளாக் செய்த சின்மயி, முகத்தை காட்ட தைரியம் இல்லாதவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று பதில் கூறியுள்ளார்.