உத்தரபிரதேச அரசின் உத்தரவை விமர்சித்து நடிகர் சோனு சூட் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் நிறைய உணவகங்கள் இருக்கிறது. இங்கு உணவு விற்பனை செய்பவர்களுடைய பெயர்களும் பணியாளர்களின் பெயர்களையும் பலகையில் எழுத வேண்டும் என்று முசாஃபர் நகர் காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது.
There should be only one name plate on every shop : “HUMANITY” 🇮🇳
— sonu sood (@SonuSood) July 19, 2024
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தான் இந்த உத்தரவு பிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்த உத்தரவு முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அந்த மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதை அடுத்து இந்தியா முழுவதும் பாஜக அரசின் இந்த உத்தரவு மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது.
நெட்டிசன் பதிவு:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு ஷூட் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர் பலகை தான் இருக்க வேண்டும். அது தான் மனிதநேயம் என்று பதிவு செய்கிறார். மனிதநேயம் என்ற அடையாளம் தான் பலகையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் நெட்டிசன் ஒருவர் சமையல் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதை சமைப்பவர் சமைக்கும் உணவில் எச்சி துப்பி சமைத்து இருக்கிறார்.
சோனு விளக்கம்:
அந்த வீடியோவை தான் பகிர்ந்திருக்கிறார். இது மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு சிலர், இந்த உணவை சோனு சூட்க்கு கொடுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு சோனு, ராமாயணத்தில் ராமர் சபரி வழங்கிய பழங்களை ஏற்றுக் கொண்டு சாப்பிடவில்லையா? அதே போல் தான் நானும் இந்த உணவை சாப்பிடுவேன் என்று அந்த நபர் செய்ததை நியாயப்படுத்தி பேசியிருந்தார். இதற்கு சோசியல் மீடியாவில் சோனு சூட் பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
SHOCKING NEWS 🚨 Bollywood actor Sonu Sood justifies sp*itting in people’s food.
— Times Algebra (@TimesAlgebraIND) July 20, 2024
He equates sp*itting on food by a miscreant with Lord Ram eating Shabri’s berries.
He said "if Lord Ram could eat Shabri’s berries, why can’t he eat rotis that have been spat upon?"
He defended… pic.twitter.com/y9vpHAs135
சோனு குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனாவும் சோனு ஷூட்டை விமர்சித்து இருக்கிறார். இந்தியாவில் மிகப் பிரபலமான திரைப்பட நடிகர்களில் ஒருவர் சோனு சூட். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கிறார்.
சோனு சமூக சேவை:
மேலும், இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோ என்று சொல்லலாம். இவர் மனித நேயம் கொண்டவர். அதிலும் கொரோனா காலகட்டம் துவங்கியது முதல் இவர் பல உதவிகளை செய்து இருந்தார். அதோடு கொரோனாவிற்கு பிறகும் அவரிடம் பல நூறு மக்கள் உதவி கேட்டு வருகிறார்கள். சோனுவும் தயங்காமல் உதவி செய்து வருகிறார்கள்.