தனுஷின் ராயன் படத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 50-ஆவது திரைப்படம் ‘ராயன்’. இந்த படத்தில் சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்து வருகிறது.
ராயன் படம்:
மேலும், இந்த படத்தில் ஒவ்வொரு நடிகர்கள் உடைய நடிப்பையும் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டியிருக்கிறார்கள். அதோடு ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி நிறுவனமாக இருப்பது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தினுடைய திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வு செய்து இருந்தார்கள். இதை ராயன் படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.
Scam ‼️ தங்கச்சிய ரேப் பண்ண கேங்கல அண்ணனுக இருக்கறானுக வளர்த்த அண்ணனயே தம்பிக 2பேரும் குத்துறானுக தங்கச்சி அண்ணன குத்துறா அண்ணன் தம்பிய குத்தி சாவடிச்சிட்டு அவன் பையன வளர்க்க தூக்கிட்டு போறான் பொறுக்கிய துரத்தி லவ்பண்ணி படுத்து புள்ளைய பெத்து நான் வளர்க்க மாட்டேன் சொல்றா#Raayan pic.twitter.com/wsOqrkTjHb
— イツフチャンドル 👑 (@itzvChandru0) August 24, 2024
நெட்டிசன்கள் விமர்சனம்:
தனுஷின் முயற்சிக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை பார்த்து பலருமே பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் நேற்று இந்த படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கு ஓடிடியில் கிடைக்கவில்லை. பலருமே இந்த படத்தை ட்ரோல் செய்தும் விமர்சித்தும் வருகிறார்கள். அந்த வகையில், தங்கச்சிய ரேப் பண்ண கேங்கல அண்ணனுக இருக்கறானுக. வளர்த்த அண்ணனயே தம்பிக 2 பேரும் குத்துறானுக. தங்கச்சி அண்ணன குத்துறா. அண்ணன் தம்பிய குத்தி சாவடிச்சிட்டு அவன் பையன வளர்க்க தூக்கிட்டு போறான்.
Ivanunga siblings ah illa mentals ah? pic.twitter.com/7zw7aN20Xj
— Maaveeran Trolls (@Maaveeran_OG) August 24, 2024
படத்தின் கதை:
பொறுக்கிய துரத்தி லவ் பண்ணி படுத்து புள்ளைய பெத்து நான் வளர்க்க மாட்டேன் சொல்றா என்று படத்தின் கதையை மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். படத்தில் ஹீரோ காத்தவராயன் பாஸ்ட் புட் ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு தம்பிகள், தங்கை இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது தம்பி அடிக்கடி குடித்துவிட்டு ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து வருகிறார். அப்போது ஏரியாவில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவருடைய மகன் கொல்லப்படுகிறார். அந்த பிரச்சனையில் காத்தவராயன் தம்பி சிக்கி கொள்கிறார்.
படம் குறித்த விவரம்:
இதற்கு பழி தீர்க்க அந்த நபரின் கும்பல் ஹீரோ தம்பியை கொலை செய்ய பார்க்கிறது. அதற்கு முன்பே ராயன் அந்த கும்பலை மொத்தமாக முடித்து விடுகிறார். கடைசியில் காத்தவராயன் எடுத்த கத்தி எங்கு கொண்டு போய் நிறுத்தியது? இறுதியில் அவர் என்ன செய்தார்? இதனால் காத்தவராயன் குடும்பத்தின் நிலை என்ன? அவருடைய தங்கைக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தினுடைய மீதி கதை.