டிராகன் பட புரமோஷன் போது கயாடு லோஹர் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு தான் ஆகி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘லவ் டுடே’.

இந்தப் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ராகன் படம்:
சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது எதிர்பார்த்ததை விட இந்த படம் வசூல் சாதனையும் செய்திருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மதியம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கயாடு லோஹர். இவர் அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் கன்னடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் மூலம்தான் நடிகை ஆனார்.

கயாடு லோஹர் பேட்டி:
அதை அடுத்து இவர் மலையாளத்தில் வெளியான 19 ஆம் நூற்றாண்டு என்ற படத்தில் நங்கேலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தார். அதற்கு பிறகு இவர் தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் தமிழில் டிராகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் டிராகன் படத்தின் ப்ரமோஷன் போது தொகுப்பாளர், உங்களுக்கு எந்த மாதிரியான ஆண்களை பிடிக்கும் என்று கேட்டிருக்கிறார்கள்.
View this post on Instagram
நெட்டிசன் ட்ரோல்:
அதற்கு கயாடு லோஹர், எனக்கு கெட்ட பையனை தான் ரொம்ப பிடிக்கும். அவனை நல்லவனாக மாற்ற வேண்டும். ஒருவேளை நல்ல பையனாக இருந்தால் அவனை கெட்ட பயனாக மாற்றி விடுவேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் விஷயத்தை தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மா, அழகு இருந்தால் அறிவு இருக்காது என்ற வசனம் வரும். அதை கயாடு லோஹர் உடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.

படத்தின் கதை:
படத்தில் ஹீரோ 12ஆம் வகுப்பில் நன்றாக படித்து மெரீட்டில் கல்லூரிக்கு செல்கிறார். ஆனால், இவர் பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண் இவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் கல்லூரியில் இவர் அடாவடி செய்யும் ரகளை பையனாக வலம் வருகிறார். 48 அரியர் வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கதாநாயகி அனுபமாவை காதலிக்கிறார். இவருடன் படித்தவர்கள் எல்லோருமே வேலைக்கு போகிறார்கள். இதனால் அனுபமா இவருடைய காதலை பிரேக் அப் செய்து விடுகிறார். இதனால் பிரதீப், போலி சர்டிபிகேட் தயார் செய்து வேலைக்கு போகிறார். பின் வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆகிறார். இந்த உண்மை மிஷ்கினுக்கு தெரிகிறது. அதற்குப்பின் பிரதீப் என்ன செய்தார்? தன்னுடைய அரியரை எல்லாம் கிளியர் செய்தாரா? தன்னுடைய காதலில் ஜெயித்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.






