ஷூட்டிங்கில் கதாநாயகியை பார்த்து அஜித் இப்படி எல்லாம் கலாய்த்தார் என்று நடிகர் பெஞ்சமின் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் பெஞ்சமின். இவர் 2000 ஆம் ஆண்டு பார்த்திபன், முரளி நடிப்பில் வெளிவந்த வெற்றி கொடி கட்டு என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பகவதி, சாமி, அன்பே சிவம், ஆட்டோகிராப், அருள், திருப்பாச்சி, திருப்பதி, நாடோடிகள் 2 போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. பின் 2020 ஆம் ஆண்டிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார்.
அஜித் குறித்து சொன்னது:
தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் அஜித் குறித்து கூறியிருந்தது, விஜய் ரொம்ப அமைதியான நபர். நல்ல மனிதர். அவருக்கு அப்படியே எதிரானவர் தான். அஜித் கலகலப்பாக பேசுவார். காமெடி பண்ணிக் கொண்டே இருப்பார். ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் என் தோள் மீது அஜித் கைபோட்டு, அங்கு பிகரு வருது பாரு என்று கதாநாயகி பார்த்து சொன்னார். என்ன சார்? என்று நான் கேட்டவுடன் ஃபிகர் தானே என்று வேடிக்கையாக பேசினார்.
அஜித் திரைப்பயணம்:
இப்படி கலகலப்பான நபர் அஜித் என்று கூறியிருக்கிறார். கோலிவுட்டில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக அஜித்தின் நடிப்பில் வெளிவந்திருந்த படம் துணிவு. இந்த படத்தை வினோத்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்ததாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படம்:
இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
படம் குறித்த தகவல்:
இந்த படத்தினுடைய முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. ஆனால், கடந்த மாதம் இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்து விட்டார். இவருடைய இழப்பு அஜித் உட்பட பலரையும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. எல்லோரும் படப்பிடிப்பு நின்று விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது.