விவேக் அன்று படத்தில் சொன்னது இன்று சுஜித்திற்கு நடந்துவிட்டது. வைரலாகும் வீடியோ.

0
6655
vivek-Sujith
- Advertisement -

இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தை தாண்டி பலரும் சுர்ஜித்துக்காக பிரார்த்தனையும்,பூஜைகளும் செய்தும் கடைசியில் அழுகிய நிலையில் தான் சுர்ஜித்தை வெளியே எடுத்தார்கள். தமிழகமே சுர்ஜித் நிலையை குறித்து கதிகலங்கி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 4 நாட்களாக நிகழ்ந்தது. ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் தான் சிக்கினான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்றது குழந்தை. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க அரசாங்கமும்,மக்களும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்கள். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய் முடிந்தது. ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக செய்தார்கள்.

-விளம்பரம்-
Image result for sujith"

அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் போன்ற 10 அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டு வந்தார்கள். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமானது. மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் பல போராடங்களை சந்தித்து வந்தார்கள். இவ்வளவு முயற்சிகள் செய்தும், நான்கு நாட்களை கடந்தும் சுர்ஜித்தை உயிருடன் வெளியே எடுக்க முடியவில்லை. மேலும், சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் தான் வெளியே எடுக்கப்பட்டது என தெரியவந்தது. சுர்ஜித்தின் இந்த கோர சம்பவத்திற்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே சோகத்தில் மூழ்கி உள்ளது. அதோடு அந்த பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள மக்களும் சுர்ஜித் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும்,சமூக வலைத்தளங்களில் சுர்ஜித் இழப்பிற்கு சினிமா பிரபலங்களும்,மக்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : பொது நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு அதார் பட நடிகை. மூக்கில் குத்திய நபர். கொட்டிய ரத்தம். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

சுர்ஜித்தின் மரணம் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் பதற வைத்தது. மேலும், சுர்ஜித் இறப்பிற்கு பிறகாவது இந்த மாதிரி ஆழ்துளை கிணறு போட்ட பின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் இருக்கக்கூடாது என பல விழிப்புணர்வுகள்செயல்பட்டு வருகிறது. மேலும், அரசாங்கம் நிறைய திட்டங்கள் கொண்டு வந்தாலும், நடைமுறை படுத்தினாலும் அதில் மக்களுக்கும் பொறுப்பு உணர்வு வேண்டும். சுர்ஜித் இறப்பு குறித்து சினிமா துறையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் எப்போதுமே தன்னுடைய படத்தின் மூலம் ஏதாவது ஒரு சமூகம் நலனிக்காக பொறுப்புணர்வுடனும், அக்கறையுடனும் கருத்து சொல்வார். இதனாலேயே அவரை ‘கருத்து கந்தசாமி’ என்று கூட ஒரு படத்தில் அழைத்தார்கள். மேலும், அவர் நடித்த ‘பலே பாண்டியா’ என்ற படத்தில் விவேக் அவர்கள் வெளிநாட்டுக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்பு அந்த படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இருக்கும். அந்த குழந்தையை எடுக்க அரசாங்கமும், மக்களும் போராடி பல லட்சம் ரூபாய் செலவழித்து எடுக்க முடியவில்லை என புலம்பி கொண்டு இருப்பார்கள். இந்நிலையில் விவேக் அவர்கள் ஆழ்துளை கிணறு மூட வெறும் 150 ரூபாய் மூடியிருந்து இருந்தால் இவ்வளவு பெரிய சோகம் நிகழ்ந்து இருக்காது என்று கூறினார். மேலும், விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது,”அன்று சொன்னது கவனம் பெறாமல் போனதால் இன்று இந்த சோகம் நிகழ்ந்தது. மரம் நடுவது, குளம் தூர் வாரும் போன்ற விஷயங்களை உதாசீனப்படுத்தாமல் செய்யுங்கள். அரசாங்கத்தை குறை சொல்வதை விடுத்து மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் இந்த மாதிரியான கோர சம்பவத்தை தவிர்க்கலாம். மேலும், இனிமேல் இந்த மாதிரி நிகழ்வு நடக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement