பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் நடனத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் இனியா நடன போட்டியில் தோற்றதால் ராதிகாவிடம் பயங்கரமாக சண்டை போட்டார். உடனே பாக்கியா, ராதிகாவிற்கு சப்போர்ட் செய்து, கோபி செய்த தவறை எல்லோருக்கும் புரிய வைத்தார். இருந்தாலுமே ஈஸ்வரியால் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் ராதிகா, எல்லோருடைய மன நிம்மதிக்காக பிக்னிக் பிளான் செய்தார். எல்லோருமே சந்தோஷமாக தங்களுடைய பிக்னிக்கை கொண்டாடினார்கள்.

சீரியல் கதை:
ராதிகா மட்டும் எல்லோருடைய சந்தோஷத்தை பார்த்து ரசித்தார். இதையெல்லாம் பார்த்த பாக்யாவிற்கு சந்தேகம் தான் வந்தது. பின் ராதிகா வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. கோபி, எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராதிகா கேட்கவில்லை. பின் ராதிகா-மையூ மட்டும் தான் வீட்டை விட்டு கிளம்பினார்கள். கோபியை அவர்களுடன் அழைத்து செல்லவில்லை. இதனால் கோபி, ரொம்பவே மனமடைந்துவிட்டார். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
View this post on InstagramA post shared by Gugan_Editz_Official (@gugan_editz_official2.0)
இனியா நடனம்:
இப்படி இருக்கும் நிலையில் இனியாவின் நடனம் குறித்த மீம்ஸ் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, கடந்த சில மாதங்களாகவே இனியா கல்லூரியில் டான்ஸ் காம்பெடிஷன் நடைபெற்றது. இதில் இனியா கலந்து கொண்டு நடனமாடி இருந்தார். ஒவ்வொரு சுற்றிலுமே இனியா நடனமாடி அடுத்த கட்டத்திற்கு சென்றார். இறுதியாக இவர் பைனல் சுற்றுக்கும் வந்தார். ஆனால், பைனல் சுற்றின் போது கோபி செய்த சில வேலையால் இனியா மனம் உடைந்து இருந்தார். இதனால் அவர் தோற்று மூன்றாம் பரிசு வாங்கிவிட்டார்.
View this post on InstagramA post shared by Gugan_Editz_Official (@gugan_editz_official2.0)
நெட்டிசன்கள் கிண்டல்:
இதற்கு காரணம் ராதிகா தான் என்று இனியா பயங்கர கலவரம் செய்து இருந்தார். அதோடு அவர், நான் முதல் பரிசு வாங்க வேண்டியவர் என்றெல்லாம் புலம்பி இருந்தார். இதை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அவருடைய முதல் மற்றும் கடைசி நடனத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, இதற்கு முதல் பரிசு தருவீர்கள்? இது எல்லாம் ஒரு டான்ஸா, முதல் பரிசு வாங்கும் அளவிற்கு நீங்கள் என்ன ஆடினீர்கள்? பங்கமாக இனியாவை கலாய்த்து வருகிறார்கள்.






