கங்குவா படத்திற்கு பிறகு ஜோதிகா- சூர்யா செய்திற்கும் செயலை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் கங்குவா படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
கங்குவா படம்:
அதோடு இந்த படம் குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள். குறிப்பாக, இந்த படத்தில் நிறைய சத்தம் தான் கேட்கிறது என்று எல்லாம் ட்ரோல் செய்து இருந்தார்கள். இருந்தாலும், இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 58.62 கோடி வசூல் செய்து இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து இருந்தார்கள். இதற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவாக பதிவு போட்டு இருந்தார்கள்.
ஜோதிகா பதிவு:
இதை அடுத்து கங்குவா படம் குறித்து நடிகை ஜோதிகா, நான் ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் தான் எழுதுகிறேன். நடிகர் சூர்யாவின் மனைவியாக இதை நான் எழுதவில்லை. கங்குவா- திரை உலகில் ஒரு அதிசயம். சூர்யா உங்களை நினைத்து ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஒரு நடிகராக சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்ல நீங்கள் காணும் கனவுகளும், முயற்சிகளும் என்னை பெருமிதம் கொள்ள செய்கிறது. இதே மாதிரி இதற்கு முன் வந்த பெரிய பட்ஜெட் படங்களை இந்த அளவுக்கு எப்போதும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், கங்குவாவின் நேர்மறையான சாதனைகளை யாருமே கண்டு கொள்ளவில்லை. கங்குவா குறித்து முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்களை சொன்னது வருத்தமாக இருக்கிறது. முதல் காட்சி முடியும் முன்பே விமர்சனங்கள் வந்துவிட்டது.
படம் குறித்து சொன்னது:
கங்குவா குழுவின் உடைய 3டி உருவாக்கம் முயற்சிகளும் பாராட்டுக்கு தகுதியானது தான் என்று கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து பலருமே ஜோதிகாவை விமர்சித்தும் இவர் இதற்கு முன்பு சொன்ன விஷயங்களை எல்லாம் ட்ரோல் செய்துமே வருகிறார்கள். குறிப்பாக, விருது விழா ஒன்றில் ஜோதிகா, கோயில் கட்ட பணம் கொடுப்பதற்கு பதில் கல்வி, மருத்துவமனைகள் கட்ட பணம் கொடுங்கள். ரொம்ப நல்லது என்றெல்லாம் பேசி இருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. தற்போது அதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்கிறார்கள்.
Suriya and Jyotika after Kanguva
— Scarlet Heart (Modi Ka Parivar) (@_Saffron_Girl_) November 26, 2024
d!saster.
😂😂😂 pic.twitter.com/KzxdojnZdn
நெட்டிசன்கள் கிண்டல்:
இப்படி இருக்கும் நிலையில் நேற்று ஜோதிகா, திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து வந்திருக்கிறார். அதே போல் சூர்யா, தன்னுடைய 45 படத்தினுடைய பூஜையை பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் நடத்தி இருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருவருமே கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? கங்குவா படத்தின் விமர்சனத்தினால் தான் கணவன்- மனைவி இருவருமே கோயில் கோயிலாக போகிறார்களா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.