பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த காதல்.!

0
12644
mugen
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வார்த்தை கடந்துவிட்டது முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறிய நிலையில் இரண்டாவது போட்டியாளராக நேற்று வனிதா விஜயகுமார் வெளியேறியிருந்தார். வனிதா வெளியேறி இருப்பதால் இனி நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று ரசிகர்கள் பீல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இன்று(ஜூலை 15) வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதற்கான நாமினேஷன் துவங்க உள்ளது. இதில் எந்த வார கேப்டனாக உள்ள சாட்சியை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அதே போல இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளரும் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

- Advertisement -

இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் யார் என்பதற்கான நாமினேஷன் பிராஸஸ்ஸை துவங்கியுள்ளனர். அதில் மிகவும் வியப்பூட்டும் விதமாக சாக்க்ஷி, தனது நெருங்கிய தோழி என்று இதுநாள் வரை சொந்தம் கொண்டாடிய அபிராமியை நாமினேட் செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முகன் மற்றும் அபிராமிக்கு இடையே ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, முகன் மற்றும் அபிராமிக்கு இடையே ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று போட்டியாளர்கள் சிலர் அரசல் புரசலாக பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement