கண்ணீர் குரல், 90ஸ்ஸின் பேவரைட் நியூஸ் ரீடர் காலமானார் – முதலமைச்சர் இரங்கல்.

0
616
shanmugam
- Advertisement -

தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் சண்முகம் உடல்நல குறைவால் மரணம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய கணீர் குரலில் அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சண்முகம். இவருடைய சொந்த ஊர் மதுரை. பத்திரிக்கை நிபுணராக மீடியாவிற்குள் நுழைந்தார். பின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். சில காலம் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

-விளம்பரம்-

பின் தொகுப்பாளர் பணியில் இருந்து விலகி சில ஆண்டுகளாக பேச்சாளராக இருந்தார். சொல்லப்போனால், 90ஸ் கிட்ஸ்களின் மத்தியில் இவருடைய குரல் ஃபேமஸ். இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் பல சேனல்களில் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், மதுரையில் படித்துக் கொண்டிருக்கும் போதே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் எல்லாம் வாங்கி இருக்கிறேன். பின் மதுரை வானொலியில் வாய்ஸ் டெஸ்ட்டுக்கு போயிருந்தேன்.

- Advertisement -

சண்முகம் குறித்த தகவல்:

அங்குதான் என்னுடைய பயணம் தொடங்கியது. பின் சென்னைக்கு வந்தேன். ஆனால், நான் செய்தி வாசிப்பேன் என்று நினைக்கவில்லை. ஸ்கிரிப்ட், விளம்பரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து பார்க்கிற வேலைதான் செட் ஆகும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கங்கை அமரன் சார் தான் நான் வைத்திருந்த ஒரு கான்செப்ட் பார்த்துவிட்டு சன் டிவியில் கொடுக்க சொன்னார். நான் போனபோது உள்ளே கூட்டிட்டு போய் ஒரு போர்டில் எழுதி இருந்த சில வார்த்தைகளை வாசிக்க சொன்னார்கள்.

சண்முகம் செய்த வேலைகள்:

வாசித்தும் காட்டினேன். பின் நான்கு நாட்கள் கழித்து செய்திகள் வாசிக்க வர சொல்லி இருந்தார்கள். மேலும், செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தாலும் விளம்பரப் பணிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். டாக்குமென்ட்ரி மாதிரி சில வேலைகளையும் இன்னொரு பக்கம் செய்து கொண்டிருக்கின்றேன். இதற்கிடையில் இயக்குனர் வேலையும் செய்து கொண்டிருக்கிறேன். வரும் ஜூன் ஜூலையில் சூட்டிங் தொடங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

-விளம்பரம்-

சண்முகம் மரணம்:

இந்நிலையில் சண்முகம் இறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்று உடல்நல குறைவால் தொகுப்பாளர் சண்முகம் காலமாகி இருக்கிறார். இவருடைய மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தியை விடுத்திருக்கிறார். அதில் அவர், தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி:

கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில் கணீர் குரல் – ஒழுங்கான வாசிப்பு – துல்லியமான உச்சரிப்பு என்று செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இவரை தொடர்ந்து பல பேரும் சண்முகத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement