Ac ரூம் வேலையை விட்டுவிட்டு அடுப்பில் வேகும் ஹோட்டல் தொழிலை ஆரம்பித்த புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் – காரணம் இது தானாம்.

0
890
vasanth
- Advertisement -

சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அதுவும் சமீப காலமாக செய்தி வாசிப்பாளர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வசந்த் சுப்ரமணியன். இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்தார். பின் ரேடியோ ஜாக்கி ஆகவும் சிலகாலம் பணி புரிந்திருக்கிறார். இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது செய்தி வாசிப்பாளராக தான். இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். பிறகு சில காலம் இவர் என்ன ஆனார்? வேற சேனலுக்கு சென்று விட்டாரா? என்று பல கேள்விகள் எழுந்தது.

-விளம்பரம்-

இவரை பற்றி பல பேருக்கு தெரியாமல் இருந்தது. இப்படி பிரபலமான தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த வசந்த் தன்னுடைய பணியை துறந்து விட்டு தற்போது உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் ஹோட்டலின் பெயர் நயம் கறி இட்லி. இந்நிலையில் இது குறித்து அவரிடம் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் மீடியாவில் இருந்து விலகியது குறித்தும், ஹோட்டல் நடத்தி வருவது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

- Advertisement -

செய்தி வாசிப்பாளர் வசந்த் அளித்த பேட்டி:

நான் ஆரம்பத்தில் என்ஜினியர் படித்துவிட்டு தான் மீடியாக்குள் நுழைந்தேன். பின் ரேடியோ, நியூஸ் என்று பல வேலைகள் செய்து இருக்கிறேன். எனக்கு எப்படியாவது ஒரு பிஸினஸ் செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. அப்போது தான் இந்த ஓட்டலை ஆரம்பிக்க வேண்டுமென நினைத்தேன். முதலில் என்னுடைய அத்தை தான் இந்த ஹோட்டலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களால் பராமரிக்க முடியவில்லை என்ற உடன் தான் நான் வந்தேன். ஒரு வேலையை எடுத்தால் முழுமையாக ஈடுபாட்டுடன் செய்யணும். என்னால் செய்தி வாசிப்பாளர் துறையிலிருந்து அதையும் இதையும் பார்த்துக் கொண்டு செய்ய முடியாது. அதனால் தான் செய்தி வாசிக்கும் விட்டு விட்டு வந்தேன்.

ஹோட்டல் வைக்க காரணம்:

அதுமட்டும் இல்லாமல் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சமையல் செய்வது ரொம்ப பிடிக்கும். வீட்டிலேயே நாங்கள் 40 பேருக்கு சமையல் செய்து இருக்கிறேன். அந்த ஒரு அனுபவத்தையும், விருப்பத்தினால் தான் நான் ஹோட்டல் தொழில் செய்ய ஆரம்பித்தேன். முதலில் ஒரு புது அனுபவமாக இருந்தது. பிறகு போகப் போக அதுவே பழகிவிட்டது. ஹோட்டலுக்கு வருபவர்கள் எல்லோரும் ஏசியில் செய்தியை வாசிப்பதை விட்டு இங்கு அடுப்பில் கஷ்டமாக இல்லையா? என்றெல்லாம் கேட்பார்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் இப்போ ஒன்னும் சமையல் செய்யவில்லை. ஆரம்பத்திலிருந்தே சமையல் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் எனக்கு அந்த மாதிரி எல்லாம் எந்த ஒரு கஷ்டமும் இருந்ததில்லை.

-விளம்பரம்-

ஹோட்டலில் சமைக்கும் முறை:

இதை நான் விரும்பித்தான் செய்து வருகிறேன். நாங்கள் இதை ஆரம்பித்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. நாங்கள் முழுவதும் நான்வெஜ் சமைத்து கொடுக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இங்கு சமைக்கும் எல்லா உணவுக்கும் உப்பு, காரம் அளவு எல்லாம் நான் தான் போடுவேன். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வேன். அப்பதான் என்னுடைய மனது திருப்தியாக இருக்கும். அதே மாதிரி வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு பாராட்டுவது தான் எனக்கு அன்று நாளே நிம்மதியாக இருக்கும். அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வேன். அதேபோல் இங்கு வந்திருக்கிறோம் பலபேர் நீங்கள் செய்தி வாசிப்பாளர் தானே என்றெல்லாம் கேட்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கும்.

ஹோட்டல் பற்றி வசந்த் கூறியது:

நம்மையும் இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். நான் மீடியாவில் இருந்து விலகி வந்ததற்கு ஒரே காரணம் தொழில் தொடங்க வேண்டும், ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை. அதனால் தான் நான் மீடியா செய்தி வாசிப்பாளர் பணியை விட்டு விட்டேன். செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே இந்த கடையை தொடங்கினோம். தற்போது எங்களுடைய வியாபாரம் நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. மக்களும் விரும்பி ருசித்து சாப்பிட்டு வருகிறார்கள். இது இப்படியே நீடிக்கனும் என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement