சூர்யாவின் அரசியில் ஆட்டம் “NGK ” படத்தின் முழு விமர்சனம்.!

0
888
- Advertisement -

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பல ஆண்டு காலமாக உருவாகி வந்த ‘Ngk ‘ திரைப்படம் இன்று(மே 31) வெளியாகியுள்ளது. சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை இங்கே காணலாம்.

-விளம்பரம்-
suriya ngk review

கதைக்களம் :

- Advertisement -

நந்த கோபால குமாரனான சூர்யா படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்கு சென்று கூடவே இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். ஆனால், இயற்கை விவசாயத்தை பலரும் எதிர்க்கின்றனர். இதனால் ஒரு எம்எல்ஏவிடம் உதவி கெட்டுப் போகிறார் சூர்யா. ஆனால், அவரோ பிரச்சினையை தீர்க்க வழி சொல்லாமல் தனது கட்சியில் சேர்ந்து விடுமாறு சூர்யாவுடன் கூறுகிறார்.

சூர்யாவும் வேறுவழியில்லாமல் கட்சியில் சேர்ந்து விடுகிறார். அதன்பின்னர் கீழ்மட்ட நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் முன்னேற்றத்தை கண்டு வருகிறார் சூர்யா. அதன் பின்னர் பல இடங்களில் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவர் எப்படி சமாளித்து அரசியலில் ஒரு மிகப்பெரிய தலைவராக உருவாகிறார் என்பதுதான் மீதிக்கதை.

-விளம்பரம்-

ப்ளஸ் :

படத்தில் சொல்லிக்கொள்ளும்படி நிறைகள் எதுவும் கிடையாது சூர்யா அவ்வப்போது மக்களிடத்தில் கேட்கும் கேள்விகள் தற்போது உள்ள அரசியல் சூழலின் நமக்கு நினைவூட்டுகிறது மேலும் முதல் பாதி ஓரளவுக்கு பார்க்கும்படி உள்ளது.இடைவேளை நண்பன் உயிர் விடுவது, அரசியலின் யதார்த்தம் இரண்டே கட்சி தான். சமீபத்தில் நடந்த ஒரு அமைச்சரின் பாலியல் கேஸ் என ஒரு சில விஷயங்கள் கவனிக்க வைக்கின்றது.

மைனஸ் :

எந்த ஒரு இடத்திலும் செல்வராகவனின் டச் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. படத்தில் நிறைய சொதப்பல்கள் நல்ல தரமான வில்லன், அரசியல்வாதி இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை அப்படியே வீணாக்கி விட்டார் செல்வராகவன். நல்ல காட்சிகள் ஒன்றும் இல்லாமல் வெறும் இசை நன்றாக இருந்து என்ன பிரயோஜனம்.

மேலும், படத்தில் தேவையில்லாத பல கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றனர் .முக்கியமாக சாய் பல்லவி கதாபாத்திரமே தேவையில்லாத கதாபாத்திரங்கள் என்பது போலவே எண்ணத்தை ஏற்படுத்தியது. மேலும்,, முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இல்லாதது போல படம் நகர்வதால் திரைக்கதை மிகவும் சொதப்பலாகவே இருந்தது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி எப்பா சாமி தாங்கல என்ற அளவுக்கு இருந்தது.

இறுதி அலசல்:

செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட வருடங்களுக்கு பின் வெளியாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் தவிடு பொடியாகியுள்ளது இந்த படம். பல பிரச்சனைகளுக்கு பின்வரும் வெளியாகியுள்ள இந்த படம் தற்போது ஏன் வெளியாகி உள்ளது என்ற எண்ணத்தை உங்களுக்கு தந்து விடும் இந்த படம் சூர்யா படமாகவும் இல்லை செல்வராகவனின் படமாகவும் இல்லை மொத்தத்தில் என் ஜி கே ஒரு எல் கே ஜி.

Advertisement