தற்போது வளர்ந்து வரும் தலை முறையினர் அனைவருக்கும் டாட்டூ குத்துவதை தான் மாடன் என்று வைத்து உள்ளார்கள். மேலும், அதையே வழக்கமான ஒன்றாகும் மாற்றி விட்டார்கள். அன்றைய காலத்தில் எல்லாம் நம் பாட்டிமார்கள் பச்சை குத்துவது தான் இந்த காலத்தில் டாட்டூ என்று ஸ்டைலாக சொல்லி வருகிறார்கள். மேலும், இன்றைய இளைனர்கள் டாட்டூ குத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டாட்டூ குத்துவது தான் நாகரிகம் என்று கூறி வருகிறார்கள். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் டாட்டூ குத்துவதை பேஷனாக மாற்றி உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் டாட்டூ குத்தும் போது எவ்வளவு வலி இருந்தாலும் அதை பொறுத்துக் கொண்டு டாட்டூ குத்துவதை குறிக்கோளாக உள்ளார்கள். மேலும்,உடம்பில் டாட்டூ இருந்தால் தான் கெத்து என்று வாழ்ந்து வருகிர கூட்டமும் உள்ளது.

மேலும், இந்த டாட்டூவை ஒரு சில பேர் டிசைனில் போடுவார்கள், ஒரு சில பேர் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெ யரை வைத்து போடுவார்கள். அந்த வகையில் தான் சினிமா பிரபல நடிகை ஒருவர் டாட்டூ குத்தி உள்ளார். இது சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அவர் யார் என்றால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நிக்கி கல்ராணிதான். மேலும், இவர் "டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இதையும் பாருங்க : உங்க அக்கா கூட இப்படி நடிக்கலயேமா. ஸ்ரீதிவ்யாவின் தங்கையின் புகைப்படத்தை கண்டு புலம்பும் ரசிகர்கள்.
அதுமட்டும் இல்லாமல் இவர் டார்லிங் படத்தில் பேய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு அழகான போய் என்று ரசிகர் கும்பல் இவரை சுற்றி சுற்றி வருகின்றது. மேலும்,நடிகை நிக்கி கல்ராணி குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர் மத்தியில் பயங்கர வரவேற்பு பெற்று உள்ளார். இதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் தற்போது டாட்டூ குத்துவதை தான் வேலையாக செய்துள்ளார். மேலும், அவர் முதுகில் பச்சை ஒன்று குத்தி உள்ளார். அது யாருடைய பெயர்? என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து யோசித்து குழம்பிப் போய் இருந்தார்கள். தற்போது அதற்கான விடை கிடைத்து உள்ளது.

மேலும்,நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் அந்த டாட்டூவில் தன்னுடைய தங்கையான சஞ்சனா கல்ராணி பெயரை குத்தி உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. சஞ்சனா கல்ராணியின் உண்மையான பெயர் அர்ச்சனா ஆகும். அதை தான் டாட்டூவாக குத்தினராம். இந்நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி அவர்கள் கன்னட திரை படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி தற்போது கன்னட மொழியிலேயே பல படங்களில் நடித்து உள்ளார். சஞ்சனா கல்ராணி அவர்கள் "ஒரு காதல் செய்வீர்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவர் தமிழில் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் மீண்டும் கன்னட மொழிக்கே சென்று விட்டார். மேலும், இவர் இதுவரை 45 படங்களுக்கு மேலாக நடித்து உள்ளார். தற்போது இவர் "இளைய தளபதி" என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.





