சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிலா சீரியல் நடிகை பவித்ரா பற்றி தெரியுமா? நிலா சீரியலுக்கு முன் அவர் என்ன செய்து இருந்தார் ? நடிகை பவித்ரா 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். தற்போது இவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினி, மாடல், விஜே என பன்முகங்கள் கொண்டவர். இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவர் பீக்காம் மற்றும் எம்பிஏ படிப்பை முடித்து விட்டு பணி புரிந்து இருந்தார். பின் நடிகை பவித்ரா வேலை செய்து கொண்டே மாடலிங் செய்து வந்தார்.
மேலும், இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தையும் வென்று உள்ளார். அதற்கு பின் பிரபலங்கள் பல பேர் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை பவித்தராவும் கலந்து கொண்டார். இதனாலேயே இவரை சொப்பனசுந்தரி பவித்ரா என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இதனை தொடர்ந்து நடிகை பவித்ரா அவர்கள் முதன் முதலில் விஜேவாக தான் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.
இதையும் பாருங்க : தொடர் பிளாப் – என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நடிகை மாதவியின் வாழக்கையை மாற்றியுள்ள ரஜினியின் அட்வைஸ்.
பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த படம் சர்க்கார். இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை பவித்தரா அவர்கள் நடித்து உள்ளார். பின் ஆளுக்கு பாதி 50/50 என்ற படத்தில் நடித்து உள்ளார். பின் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தார். பவித்ரா அவர்கள் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழச்சி, சூரிய வணக்கம், வணக்கம் தமிழா என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் நிலா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ராஜு ரவிச்சந்திரன், பவித்ரா தான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்ரீதர், ராஜீவ் ரவிச்சந்திரா, கவிதா சோலைராஜன், ஸ்ரீதேவி அசோக், ஷர்மிதா கவுடா, ஜீவா ரவி, சாதனா போன்ற பலர் நடித்து உள்ளார்கள். இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
ஒரு திருமணமான பெண் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும், தன்னுடைய லட்சியத்தில் எப்படி சரிசமமாக பேலன்ஸ் செய்து வெற்றி பெறுகிறார் என்பது தான் இந்த நிலா சீரியலின் கதை இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் பவித்ரா, சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். சீரியலுக்கு முன்னர் தான் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் தர்பூசணி பழத்தை எல்லாம் வைத்து மோசமாக போஸ் கொடுத்தாலும் தற்போது நடிகையான பின்னரும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் பவித்ரா.