நினைத்தாலே இனிக்கும் சீரியலின் ஹீரோ புது வீடு வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புது புது கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதோட புதுமுக நடிகர்கள் பலருமே சின்னத்திரையில் அறிமுகமாகி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபலமான சேனல்களில் ஒன்றான ஜீ தமிழில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று தான் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியல் இதுவரை 900 எபிசோடுகளை கடந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் ஆனந்த் செல்வன்.
நினைத்தாலே இனிக்கும் சீரியல்:
இவருக்கு ஜோடியாக சுவாதி சர்மா நடிக்கிறார். இவர்கள் இருவரின் ஜோடி மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த தொடரில் நேத்ரா, ராணி, சுரேஷ், ஹேமா ஸ்ரீகாந்த், பால சுப்ரமணியன், தீபா நேத்ரன், டாக்டர் ஷர்மிளா மற்றும் அரவிந்த் கதரே ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தத் தொடர் பெங்காலியில் ஒளிபரப்பான ’மித்தாய்’ சீரியலின் ரீமேக் ஆகும்.
ஆனந்த் செல்வன் நடித்த சீரியல்:
இந்த தொடரை மான் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த சீரியலில் நடிக்கும் ஆனந்த் செல்வன் இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த ஆயுத எழுத்து என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சரண்யா நடித்து இருந்தார்.
ஆனந்த் செல்வன் குறித்த தகவல்:
அதற்கு முன்பே இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த உயிரே என்ற சீரியலிலும் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது நினைத்தாலே இனிக்கும் சீரியல் தான்.
இந்த நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன் புது வீடு வாங்கியிருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனந்த் செல்வன் புது வீடு:
அதாவது, நடிகர் ஆனந்த் செல்வன் அவர்கள் சொந்தமாக புது வீடு ஒன்று கட்டி குடியேறி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஆனந்த் இணையத்தில் பதிவிட்டு, சொந்த காசில் சொந்த வீடு கட்டுவது ஒரு தனி சுகம் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடந்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.