சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் வேற யாரும் இல்லைங்க, சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி. இதனால் இவருடைய பெயர் சோசியல் மீடியாவில் பயங்கரமாக அடிபட்டு வருகிறது. அதோடு நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை இருப்பதாக இவர் கூறி இருந்த கருத்து பயங்கர சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர் சின்னத்திரை சீரியல் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம் என்றே சொல்லலாம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த 7C என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார் ஸ்ரீநிதி. ஆனால், இவர் இதற்கு முன்பே குழந்தை பருவத்தில் பல படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இருந்த யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்ரீநிதி நடித்திருந்தார். இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனால் இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருந்தது.
இதையும் பாருங்க : உங்களுக்கு நடிப்பே வரல, உங்க Fansனு சொல்றவங்க எல்லாம் உங்க ஹாட் போட்டோ ஷூட்ட பாத்து வந்தவங்க தான் – ரசிகர் கமென்டிற்கு மாளவிகா பதிலடி.
வலிமை படம் குறித்து ஸ்ரீநிதி சொன்னது:
இதனை தொடர்ந்து இவர் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான வலிமை படம் பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதியும் வலிமை படத்தை பார்த்து கமெண்ட் சொல்லியிருந்தார். அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே வலிமை படம் ஸ்ரீநிதி கூறியிருந்தது,
ஸ்ரீநிதியை விமர்சித்த அஜித் ரசிகர்கள்:
அஜித் சாரை நான் நேரில் கூட பார்த்துவிடுவேன். வலிமை படம் பார்க்க பொறுமை வேண்டும். ஆனால், எனக்கு பார்க்க பொறுமை இல்லை என்று சொன்னதை கேட்ட தல ரசிகர்கள் ஸ்ரீநிதி குறித்து கேவலமாக பேசி இருந்தார்கள். அதிலும் சிலர், இவரை பேச்சிலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி மாதிரி உன்னை கர்ப்பமாக்கி நடு ரோட்டில் விடனும் என்று எல்லாம் கமென்ட் போட்டு இருந்தார்கள் என்று வேதனையுடன் கூறி இருந்தார். இதனால் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிகவும் டிப்ரஷனில் இருப்பதாக பதிவு செய்து இருந்தார்.
ஸ்ரீநிதி நடிக்கும் சீரியல்:
இப்படி இவர் கூறியிருந்தது பார்ப்பவர்களின் கண்கலங்க வைத்து இருந்தது. இருந்தாலும் நடிகை ஸ்ரீநிதி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் ஸ்ரீநிதி நடித்து இருந்தார். இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ஸ்ரீநிதி விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் சீரியலில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாகி வந்தது. குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
சீரியலில் விலகிய ஸ்ரீநிதி:
இந்த நிலையில் சீரியல் இருந்து நடிகை ஸ்ரீநிதி விலகியிருக்கும் தகவல்கள் வைரலாகி வருகிறது. தர்ஷினி என்ற ரோலில் இனிமேல் தாட்சாயினி என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் சிலர் நெகட்டிவ் கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர். அதாவது ஸ்ரீநிதி எந்த சீரியலும் இது வரை தொடர்ந்து நடிப்பதில்லை. நிறைய சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாதியிலேயே இவர் விலகி விடுகிறார். இது தான் அவர் அடிகடி செய்யும் வேலை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இவர் இந்த சீரியல் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை? ஸ்ரீநிதி இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.