நினைத்தாலே இனிக்கும் தொடரில் சூப்பர் ட்விஸ்ட் – இவர் இறந்துட்டா சீரியல் எப்படி நகரும் ?

0
1589
- Advertisement -

நினைத்தாலே இனிக்கும் சீரியலின் சூப்பர் டீவ்ஸ்ட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும், குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் சீரியலில் நினைத்தாலே இனிக்கும் ஒன்று.

-விளம்பரம்-

இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாகி வந்தது. குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் சுவாதி ஷர்மா, ஆனந்த் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் இனிப்பு விற்கும் தொழிலாளியாக கதாநாயகி பொம்மி அறிமுகம் ஆகிறார். காலப்போக்கில் அவர் இனிப்பு விற்கும் இடத்தில் உள்ள முதலாளியை ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்.

- Advertisement -

அதற்குப் பிறகு கதையில் யாரும் எதிர்பாக்காத அளவிற்கு பல திருப்பங்கள் செல்கிறது. சீரியலில் ஹீரோ சித்து பொம்மியை திருமணம் செய்து கொண்டும் பல நாட்கள் அவரை பிடிக்காமல் இருந்தார். பின் பொம்மியை ஏற்றுக்கொண்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்தபோது பொம்மியின் உயிருக்கு ஆபத்து வருகிறது. மேலும், சித்ரா பௌர்ணமி அன்று பொம்மி இறந்து விடுவாள் என்று நம்பூதிரி ஒருவர் கூறுகிறார்.

அதற்கு ஏற்ற வகையில் பொம்மியை பிடிக்காத சீரியலின் வில்லிகள் ஒன்று சேர்ந்து பொம்மியை கொடூரமாக கொல்ல நினைக்கிறார்கள். இது குறித்த புரோமோ தான் வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், இனி சீரியலில் பொம்மி கிடையாதா? நினைத்தாலே இனிக்கும் சீரியல் முடிவுக்கு வருகிறதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் குறித்த ஒரு புதிய சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

அதாவது, இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதில்லை. இனிமேல் தான் இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் நடக்கப்போகிறது. நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கதாநாயகியி பொம்மி இறந்து ஆவியாக வந்து அனைவரையும் பழிவாங்கும்படி கதை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொடரின் கதைக்களம் மாறும் என கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இனிவரும் காலங்களில் விறுவிறுப்பான ட்விஸ்ட்களுடன் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் இது ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக வரவேற்கப்படும்.

Advertisement