-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

தப்பான இடத்துல மாட்டிக்கிட்டா, 15 நாள்லே பிரிந்துவிட்டோம் – சம்யுக்தா விஷயத்தில் விஷ்ணு அளித்த முதல் பேட்டி.

0
1854

திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பிரிந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஹீரோவின் தம்பியாக அபினவ் என்ற சீரியலில் நடித்தவர் தான் விஷ்ணுகாந்த். இவர் இதற்கு முன்பே பல தொடர்களில் நடித்திருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பிரபலமான தொடரிலும் இவர் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் ரஜினி, கோகுலத்தில் சீதை போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார்.அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருந்தார்.

இதனிடையே இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்தார். இது குறித்து இருவருமே பகிரங்கமாக அறிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும், இவர்கள் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர். விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் விரைவில் எல்லாம் தெரியவரும் என்று பதிலளித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘கள்ளத் தொடர்புகள் உண்மையான காதலை பொய்யான காதலாக மாற்றிவிடுகிறது. இதற்கு மேலும் அமைதியாக இறுக்கப்போவது இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

விஷ்ணுகாந்தின் இந்த புதிவை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சம்யுக்தா தனது இன்ஸ்டா ஸ்டோரியில்”ஒரு பெண்ணைத் தோற்கடிக்க முடியாது என்று தெரிந்ததும், அவளது நடத்தை குறித்த விமர்சனத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்” எனக் குறிபிட்டு ‘ஃபேக் லவ்’ என்கிற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருக்கிறார். மேலும், ‘Peace over drama & distance over disrespect’ என்கிற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷ்ணுகாந்த் தங்களுக்கு இன்னும் விவாகரத்து எல்லாம் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. திருமணத்திற்கு பின்னர் அவர் நண்பர்களுடன் பேசி வந்தால். அதை ஏன் என்று கேட்டதற்கு நான் அப்படித்தான் பேசுவேன் என்றார். சரி, நான் முக்கியமா அவன் முக்கியமா என்று கேட்டதற்கு அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறிவிட்டால். இப்படித்தான் பிரச்சினை ஆரம்பமானது.

மேலும், இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் அவரது தந்தை தான். அவரது தந்தை இவளை விட்டு விட்டு எப்போதோ சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது திடீரென்று மீண்டும் வந்திருக்கிறார்.அவள் இப்போது சில தப்பான விஷயத்தை செய்து கொண்டு இருக்கிறாள் அதற்கு அவரது தந்தையும் உடந்தையாக இருக்கிறார். இருவருக்கும் இருக்கும் பிரச்சனை அமர்ந்து பேசினாலே தீர்ந்துவிடும். ஆனால், அவள் எனக்கு பேசக்கூட வாய்ப்பை கொடுக்கவில்லை. இப்படி தொடர்ந்து பல பிரச்சினைகள் வந்து கொண்டு இருப்பதால்தான் நாங்கள் இருவரும் தனியாக இருக்கின்றோம்

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news